search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது கழிப்பிடம்"

    • தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
    • அடுத்த 6 மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் : 

    தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதன்படி பிரத்யேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் சார்ந்து, உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் பொதுக்கழிப்பிடங்களில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், க்யூ ஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் செய்யும் நோக்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி தூய்மை இந்தியா திட்ட இணைய தள செயலியுடன் இணைக்கப்பட்ட க்யூ ஆர் கோடு பொதுக் கழிப்பிடங்களில் முகப்பில் வைக்கப்படும்.

    பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது, சுகாதாரம் மற்றும் தண்ணீர், விளக்கு வசதி இல்லாமல் இருப்பது போன்ற குறைகளை, தங்கள் செல்போனில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம், தூய்மை இந்தியா திட்ட இணைய செயலியில் அது பதிவாகிவிடும். அந்த தகவல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அடுத்த 6 மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் அளவில் இத்திட்டத்தை வேகப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பொதுக் கழிப்பிடத்திலும் தூய்மை இந்தியா திட்டத்துடன் இணைந்த க்யூ ஆர் கோடு வைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    • காட்டுப்புத்தூர் பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பள்ளிகள் மற்றும் அரசு அலுவவலகங்கள் ஆகியவற்றில் உள்ள கழிப்பிடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    திருச்சி :

    பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர்.ஆர்.செல்வராஜ், ஐ.ஏ.எஸ்.மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.பிரதீப்குமார், ஆகியோரின் அறிவுரைகளின்படி, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி வார்டு எண். 15- காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாய கழிப்பிடம் மற்றும் வார்டு எண்.06, தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஆண்கள் கழிப்பிடம் ஆகியவற்றை செயல்அலுவலர் ச.சாகுல் அமீதுஆய்வுமேற்கொண்டார்.

    மேலும், பேருந்துநிலையம் மற்றும் பாரதியார் தெருவில் உள்ள 2பொதுகழிப்பிடங்கள், அனைத்து வார்டுகளிலும் உள்ள 16 -சமுதாய கழிப்பிடங்கள்

    மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடம் ஆகியவற்றில் உள்ள கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை பாதுக்காப்பான முறையில் மூடிவைத்திடவும், கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை சுற்றி உள்ள இடங்களில் முட்செடிகள் மற்றும் புல்பூண்டுகளை அகற்றி சுத்தமாக வைத்து பராமரித்து பாதுகாத்திட 3 -குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், காட்டுப்புத்தூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 3000-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவவலகங்கள் ஆகியவற்றில் உள்ள கழிப்பிடங்களை தூய்மையாக பராமரித்தும் மற்றும் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை (செப்டிக் டேங்க்) உரிமையாளர்கள் மூடி பாதுகாக்காவும், பழுதடைந்த நிலையில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை ஒரு வார காலத்திற்குள் சீரமைத்து பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் போது முறையாக பராமரித்து பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க இதன்வழி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் போது பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதா, துணைத்தலைவர் சி.சுதா, இளநிலை உதவியாளர்கள் பாரதியார், இராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

    கழிப்பிடம் 300 மீட்டர் தொலைவில் இருப்பதால், மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக மனுக்கள் அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

    அரவேணு:

    ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட தும்பூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 45 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிப்பிடம் உரிய பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. கழிப்பிடம் 300 மீட்டர் தொலைவில் இருப்பதால், மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக மனுக்கள் அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பள்ளியின் பக்கத்திலேயே குழந்தைகளுக்கான கழிப்பறை வசதியை செய்து தர வேண்டும் பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சமீபத்தில் 6 வெவ்வேறு இடங்களில் தலா ரூ.5.35 லட்சம் மதிப்பில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
    உடுமலை:

    உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. அதன்படி  ஒவ்வொரு கிராமத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். பல கிராமங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுக்கழிப்பிட வசதிகள் செய்து தரப்படவில்லை.

    இதனால் சாலையின்  ஓரங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். சில கிராமங்களுக்கு செல்லும் மக்கள் இந்த கழிப்பிடப்பகுதியை கடந்தே செல்ல வேண்டியுள்ளது. திறந்த வெளிக்கழிப்பிடம் பயன்படுத்தக்கூடாது என்று அரசு பல லட்சம் ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்து வருகிறது.

    இருப்பினும் கிராமங்களில் அனைத்து குடியிருப்புகளிலும் கழிப்பிட வசதியுடன் வீடுகள் இல்லை. இதனால்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் சமீபத்தில்6 வெவ்வேறு இடங்களில் தலா ரூ. 5.35 லட்சம் மதிப்பில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    அதேபோல் பொதுக்கழிப்பிடம் தேவையான இடங்களை கண்டறிந்து, அங்கு கட்டுமானம் தொடங்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ‘திறந்த வெளிக்கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் கிராமங்களில் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இதனால் தேவைப்படும் ஊராட்சிகளில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடம் அமைக்கப்படுகிறது என்றனர்.
    ×