search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மின் இணைப்பு"

    • காலக்கடுவை 7 நாட்களாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
    • அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் வசதி மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய மாற்றங்களை விரைவில் கொண்டு வர உள்ளது. அதன்படி நுகர்வோர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த 7 நாட்களில் புதிய மின் இணைப்பு வழங்கவும், வழங்க தாமதமானால் நுகர்வோர் அபராதம் கோரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது ஒருவர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த காலக்கடுவை 7 நாட்களாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

    இந்த புதிய திருத்தங்களின்படி 48 மணி நேரத்திற்குள் தற்காலிக மின் விநியோகத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் குறைபாடு உள்ள மீட்டர்களை மீண்டும் பொருத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து ஏழு நாட்களை தாண்டினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விண்ணப்பதாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வரவுள்ளது.

    மேலும் கிரிட் இன்டராக்ட் சோலார் (ஜி.ஐ.எஸ்.எஸ்.) நிறுவ தாமதத்திற்கு ரூ.71 ஆயிரம் மற்றும் குறைகளை கையாள்வதில் தோல்வி அடைந்தால் ரூ.250, நுகர்வோரின் புகார்களுக்கு பதில் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.25 முதல் அதிகபட்சம் ரூ.250 வரையிலும் நுகர்வோர் அபராதம் கோரலாம்.

    மேலும் பழுதடைந்த மீட்டர்களை ஏழு நாட்களுக்குள் மாற்றாவிட்டால் ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு அபராதம் விதிக்க ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

    நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடமையாக இருப்பதால் ஆறு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் மின் தடைக்கும் நுகர்வோருக்கு ரூ.50 அபராதம் செலுத்த நேரிடும் என புதிய திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

    • பாவு நூல் சப்ளை இல்லாமல் 50 சதவீத விசைத்தறிகள் முடங்கியுள்ளன.
    • மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது. சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விசைத்தறி ஜவுளி தொழில் சிறு மற்றும் குறுந்தொழில் என்பதால் 3 ஏ 2 எனும் தனி டேரிப் மற்றும் ஸ்லாப்'முறையில் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது.இதன்படி முதல் 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த கூலி முறையாக கிடைக்காதது, மார்க்கெட் வீழ்ச்சி, உற்பத்தி குறைப்பு, உதிரி பாகங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் விசைத்தறி ஜவுளி தொழில் நெருக்கடி நிலையில் உள்ளது. மேலும் பாவு நூல் சப்ளை இல்லாமல் 50 சதவீத விசைத்தறிகள் முடங்கியுள்ளன.

    புதிய ஒப்பந்த கூலி கேட்டு விசைத்தறியாளர்கள் சில மாதங்களுக்கு முன் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் புதிய கூலி உயர்வு அமல்படுத்த கையெழுத்து ஒப்பந்தமானது.போராட்டங்களை முடித்து புதிய கூலியை எதிர்பார்த்து இருந்த விசைத்தறியாளர்களுக்கு, மின் கட்டண உயர்வு இடியாய் வந்து இறங்கியது. இதன்தொடர்ச்சியாக மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர், மின்துறை அமைச்சரை சந்தித்து உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினர்.முதல்வருடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதியளித்திருந்தார். இதை நம்பி 8 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை விசைத்தறியாளர்கள் வாபஸ் பெற்றனர். மின் கட்டணம் குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் விசைத்தறியாளர்களும் ஊர் திரும்பினர். .ஆனால் இரண்டு மாதமாகியும் எந்த அறிவிப்பும் வராததால் விசைத்தறியாளர்கள் கடும் விரக்தியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், மின் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே விசைத்தறிகளை இயக்க முடியும் என்ற நிலையில் உள்ளோம். ஆனால், அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.கடந்த வாரத்தில் தொழில்துறைக்கு ஓரிரு சலுகைகள் வழங்கியுள்ளனர்.அதில், விசைத்தறி இடம் பெறவில்லை. இரு மாதங்கள் ஆகியும் எந்த அறிவிப்பும் வராததால் ஏமாற்றத்தில் உள்ளோம். அறிவிப்பு வருமா, வராதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.உடனடியாக நல்ல அறிவிப்பை வெளியிட்டு, விசைத்தறி தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும் என்றனர்.

    திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறு, குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அலுவலர்களால் ஆய்வு செய்யப்படுகிறது.

    தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது.நிலம் அடமானம் அடிப்படையில் கடன் பெற்று போர்வெல் அமைக்கும் விவசாயிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச மின்சாரமும், மின் மோட்டார் அமைக்க 50 ஆயிரம் ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து போர்வெல் அமைத்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறு, குறு விவசாயிகள் பாசனத்திட்டம் அமைக்க டாப்செட்கோ திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுக்கு முன் தேர்வு செய்து கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக போர்வெல் அமைக்க கடன் பெற்றோம்.

    கடந்த 3 மாதத்திற்கு முன் பயனாளிகளுக்கு மின் மோட்டார் உள்ளிட்டவை கொள்முதல் செய்ய 50 ஆயிரம் ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டது. ஆனால் மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், சம்பந்தப்பட்ட துறையிலிருந்து, மின் இணைப்பு வழங்க, ஒதுக்கீடு பெறவில்லை என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் பயனில்லை.

    தற்போது இலவசம் மற்றும் தட்கல் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு மானிய திட்டத்தில், இணைந்ததால் மற்ற திட்டங்களின் கீழ் மின் இணைப்பு பெற முடியாத சிக்கலும் உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×