என் மலர்

  தமிழ்நாடு

  தமிழகத்தில் 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க திட்டம்- இல்லையெனில் நுகர்வோர் அபராதம் கேட்கலாம்
  X

  தமிழகத்தில் 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க திட்டம்- இல்லையெனில் நுகர்வோர் அபராதம் கேட்கலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலக்கடுவை 7 நாட்களாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
  • அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும்.

  சென்னை:

  தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் வசதி மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய மாற்றங்களை விரைவில் கொண்டு வர உள்ளது. அதன்படி நுகர்வோர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த 7 நாட்களில் புதிய மின் இணைப்பு வழங்கவும், வழங்க தாமதமானால் நுகர்வோர் அபராதம் கோரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  தற்போது ஒருவர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த காலக்கடுவை 7 நாட்களாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

  இந்த புதிய திருத்தங்களின்படி 48 மணி நேரத்திற்குள் தற்காலிக மின் விநியோகத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் குறைபாடு உள்ள மீட்டர்களை மீண்டும் பொருத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து ஏழு நாட்களை தாண்டினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விண்ணப்பதாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வரவுள்ளது.

  மேலும் கிரிட் இன்டராக்ட் சோலார் (ஜி.ஐ.எஸ்.எஸ்.) நிறுவ தாமதத்திற்கு ரூ.71 ஆயிரம் மற்றும் குறைகளை கையாள்வதில் தோல்வி அடைந்தால் ரூ.250, நுகர்வோரின் புகார்களுக்கு பதில் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.25 முதல் அதிகபட்சம் ரூ.250 வரையிலும் நுகர்வோர் அபராதம் கோரலாம்.

  மேலும் பழுதடைந்த மீட்டர்களை ஏழு நாட்களுக்குள் மாற்றாவிட்டால் ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு அபராதம் விதிக்க ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

  நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடமையாக இருப்பதால் ஆறு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் மின் தடைக்கும் நுகர்வோருக்கு ரூ.50 அபராதம் செலுத்த நேரிடும் என புதிய திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×