search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி"

    இந்தியாவுடனான எந்த பிரச்சனையையும் போரினால் தீர்த்துவிட முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி குறிப்பிட்டுள்ளார். #PakistanForeignMinister #warwithIndia #ShahMehmoodQureshi
    நியூயார்க்:

    நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி  அமெரிக்கா சென்றுள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அவர் சமீபத்தில் பேட்டியளித்தார்.

    இந்தியாவுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக இந்த பேட்டியின்போது கருத்து தெரிவித்த ஷா மெஹ்மூத் குரேஷி , அமைதிக்கான வழியில் இந்தியா ஓரடி முன்னெடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னர் தெரிவித்திருந்ததை சுட்டிக் காட்டினார்.

    நாங்கள் அமைதிக்கான முதலடியை எடுத்து வைத்தோம். இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இருநாடுகளுமே அணு ஆயுத வலிமைமிக்க நாடுகளாக இருக்கும் நிலையில் பிரச்சனைகளை போரினால் சரிசெய்ய முடியாது.

    போர்முறை என்பது இதில் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டும்தான் ஒரே தீர்வாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். #PakistanForeignMinister #warwithIndia #ShahMehmoodQureshi 
    பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரியாக உள்ள ஹவாஜா ஆசிப்பை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. #KhawajaAsif

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியாக உள்ள ஹவாஜா ஆசிப் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் என்.ஏ-110 தொகுதியில் போட்டியிட்டு வென்று தேசிய சபைக்கு சென்றார். அவரை எதிர்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த உஸ்மான் தார் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    இக்வாமா எனப்படும் ஐக்கிய அமீரக நாட்டின் பணி அனுமதி (work permit) ஆசிப்பிடம் இருக்கிறது. ஆனால், அவர் வேட்புமனுவில் அதனை மறைத்துள்ளார் எனவே ஆசிப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உஸ்மான் தார் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

    இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கிய இஸ்லாமாபாத் ஐகோர்ட், அவர் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், அவர் தனது பதவியை இழந்தார். 

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஹவாஜா ஆசிப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஹவாஜா ஆசிப்பை தகுதிநீக்கம் செய்து முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #KhawajaAsif 
    ×