search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் விபத்து"

    • விபத்தில், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
    • உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டனர்.

    வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழந்து விழுந்தது,

    இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

    ஹரிப்பூர் மாவட்டத்தில் உள்ள கான்பூரில் இருந்து மலைப்பாங்கான கிராமத்திற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது தர்னாவா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

    அதிக வேகம் காரணமாக ஒரு திருப்பத்தின்போது பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இறந்தவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.

    விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்பு வாகனங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு ஹரிபூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    • பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது.
    • பஸ் தாறுமாறாக ஓடி பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    கராச்சி:

    பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 48 பயணிகள் இருந்தனர். பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் பஸ் சென்ற போது ஒரு திருப்பத்தில் வேகமாக திரும்ப டிரைவர் முயன்றார்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 40 பேர் பலியானார்கள். ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    பாகிஸ்தான் நாட்டில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ரஹிம்-யார்-கான் மாவட்டம் ஃபடாபூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது, எதிரே வந்த லாரி மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
    ×