search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் படிகட்டு"

    • திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.
    • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி இவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களும் இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளதால் அரசு பேருந்தில் செ ல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி சாலை வழியாக திருப்பூர் வரும் அரசு நகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தோன்றியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதை கண்ட நபர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது பெற்றோர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஒரு சில பேருந்துகள் மட்டுமே இருக்கும் காரணத்தால் அந்த நேரத்தில் பள்ளிக்கு தாமதம் ஏற்படும் என ஒரே பேருந்தில் ஏராளமான மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் பேருந்துகளில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    பெரும்பாலான வழித்தடத்தில் மாணவர்கள் இதுபோன்று படியில் தொங்கி பயணம் செய்யும் நிலை உள்ளதாகவும் குறிப்பிட்ட பள்ளி நேரத்தில் அதிக அளவிலான அரசு பேருந்துகளை இயக்கி மாணவர்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதுடன் பாதுகாப்பான பயணத்தி னை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேவகோட்டையில் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
    • ஆனால் காவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் இல்லாதது கேள்விக்குறியாக உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன. தேவகோட்டை நகர் மற்றும் கிராமங்களை சுற்றியுள்ள மாணவ-மாணவிகள் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு பஸ்கள் வாயிலாக பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தேவகோட்டை-காரைக்குடி சாலையில் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பஸ்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

    பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் இருந்தால் மட்டுமே ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்களை தடுக்க முடியும் என போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தெரிவித்தனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் காலை நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் காவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் இல்லாதது கேள்விக்குறியாக உள்ளது.

    • அவனியாபுரத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • போக்குவரத்து காவல்துறை சார்பில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அவனியாபுரம்

    மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாணவன் பிரபாகரன் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்து பலியானார். இதையடுத்து போக்குவரத்து காவல்துறைதுணை ஆணையர் ஆறுமுகசாமி, கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார், உதவி போக்குவரத்து காவல் ஆணையர் செல்வின் ஆகியோரது அறிவுரையின்படி மதுரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அவனியாபுரம் பெரியார் சிலை முன்பு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தங்கபாண்டியன், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்க வைத்தார். இதில் ஆர்.டி.ஓ. சித்ரா, திருப்பரங்குன்றம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பூர்ணா கிருஷ்ணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கண்ணன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன், போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வம், காவலர்கள் அழகு முருகன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×