search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சை தேயிலை"

    • கோடை வறட்சியின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
    • தேயிலை விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

     கூடலூர்,

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் தினமும் மூங்கில் காடுகள் உள்பட பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. வறட்சியான காலநிலையால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.

    வழக்கமாக கோடை வறட்சியை தணிக்கும் வகையில் அடிக்கடி கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால், இதுவரை மழை பெய்யாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் தடுப்பணைகளும் வறண்டு வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. விளைச்சல் பாதிப்பு இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக பச்சை தேயிலை சாகுபடி உள்ளது.

    இதில் கூடலூர் பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், நாளுக்கு நாள் பச்சை தேயிலை விளைச்சல் அடியோடு குறைந்து வருகிறது. ஏற்கனவே உரிய விலை கிடைக்காததால் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது விளைச்சலும் குறைந்து வருவதால் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்கு கூட வருவாய் கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அடிக்கடி மழை பெய்யும். ஆனால், நடப்பு ஆண்டில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. பச்சை தேயிலை விளைச்சல் பாதித்துள்ளதால் தொழிற்சாலைகளுக்கு தேயிலை வரத்தும் குறைந்துள்ளது என்றனர்.

    • தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.
    • கண்காணிக்கும் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு ஜனவரி மாதத்துக்கான குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.18.58 ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.

    தோட்டங்களில் பறிக்கும் பச்சைத் தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா்.

    இந்த நிலையில் ஜனவரியில் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.18.58 ஆக தேயிலை வாரியம் விலை நிா்ணயம் செய்துள்ளது.

    இந்த மாதாந்திர விலையை தேயிலை வாரியம் நிா்ணயித்துள்ளதாகவும், இந்த விலையை தேயிலைத் தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு உரிய முறையில் வழங்குகிறதா என்பதை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு கண்காணிக்கும் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

    • நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்

    அரவேணு

    கோத்தகிரி அருகே கடைகம்பட்டி கிராமத்தில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி னார். ஊர் நாட்டா மை கண்ணப்பன், ஊர் நிர்வாகிகள் காரியதரிசி ரமேஷ் , போஜ ராஜன், செவன வாத்தியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், படுகர் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சேர்க்க வேண்டும், கடந்த சில மாதங்களாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 8 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது.

    இது கூலி, தோட்டங்களை பராமரிக்கவே போதுமானது இல்லை. பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னூரில் உள்ள தேயிலை வாரியம் முன்பு வருகிற செப்டம்பர் 14-ந் தேதி மலை மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டத்திற்கு கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. கண்ணப்பன் வரவேற்றார். சாலி நன்றி கூறினார். 

    ×