search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலக்கடலை ஏலம்"

    • நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 116.49 1/2 குவிண்டால் எடை கொண்ட 399 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ அதிகபட்ச விலையாக ரூ.86.00-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.63.13-க்கும், சராசரி விலையாக ரூ.84.30-க்கும் என மொத்தம் ரூ. 8 லட்சத்து 44ஆயிரத்து 12-க்கு ஏலம் போனது.

    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.87க்கும், குறைந்தபட்சமாக ரூ.65க்கும், சராசரியாக ரூ.84க்கும் ஏலம் போனது.
    • இந்த வார ஏலத்துக்கு, 580 மூட்டைகள் நிலக்கடலைவரத்து இருந்தது.

    காங்கயம்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.38 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு திங்கள்கிழமை ஏலம் போனது. இந்த வார ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 3 விவசாயிகள் 13 மூட்டைகளில் (451 கிலோ) தேங்காய் பருப்பினை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

    காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனா். தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.87க்கும், குறைந்தபட்சமாக ரூ.65க்கும், சராசரியாக ரூ.84க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.38 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.22 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு, 580 மூட்டைகள் நிலக்கடலைவரத்து இருந்தது. முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,450 முதல் ரூ.7,650 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.28 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
    • ஏலத்தில் 750 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    அவினாசி:

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.28 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 750 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,700 முதல் ரூ.7,850 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,200 முதல் ரூ.7,450 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,050 வரையிலும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.28 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளிடமிருந்து எந்தவித கட்டணமும் பெறப்படுவதில்லை.
    • வியாபாரிகளிடம் மட்டும் ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வேளாண் வணிக உதவி வேளாண்ைம அலுவலர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குன்னத்தூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பாக புதியதாக கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 28.10.2022 முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நிலக்கடலை ஏலம் நடைபெற உள்ளது.

    எனவே நிலக்கடலை அறுவடை செய்து வரும் விவசாயிகள் நிலக்கடலையை உலர வைத்து காய்ந்த நிலக்கடலையை குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம். கொண்டுவரும் நிலக்கடலையை ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 350 மூட்டைகள் வரை இருப்பு வைத்துள்ளனர்.ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளிடமிருந்து எந்தவித கட்டணமும் பெறப்படுவதில்லை.

    வியாபாரிகளிடம் மட்டும் ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது .தங்களுடைய நிலக்கடலைக்கு அதிக விலை கிடைக்க தரம் பிரிப்பது அவசியமாகிறது. நிலக்கடலை காய்கள் தரம் உள்ளதாக இருக்க அதில் உள்ள கல், மண், தூசி, கெட்டுப்போன காய்கள், சுருங்கிய முதிராத காய்கள் இவைகளை தனியாக பிரித்து விட வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட நிலக்கடலை காய்களை நல்ல கோணி பைகளில் போட்டு சிப்பமிட்டு எடுத்து வர வேண்டும்.ஏலத்தில் அதிக அளவிலான வியாபாரிகள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரஸ்வதியை 9894171854 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×