சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.22 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.87க்கும், குறைந்தபட்சமாக ரூ.65க்கும், சராசரியாக ரூ.84க்கும் ஏலம் போனது.இந்த வார ஏலத்துக்கு, 580 மூட்டைகள் நிலக்கடலைவரத்து இருந்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

காங்கயம்:

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.38 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு திங்கள்கிழமை ஏலம் போனது. இந்த வார ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 3 விவசாயிகள் 13 மூட்டைகளில் (451 கிலோ) தேங்காய் பருப்பினை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனா். தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.87க்கும், குறைந்தபட்சமாக ரூ.65க்கும், சராசரியாக ரூ.84க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.38 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.22 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு, 580 மூட்டைகள் நிலக்கடலைவரத்து இருந்தது. முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,450 முதல் ரூ.7,650 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com