search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய அடையாள அட்டை"

    • கிருஷ்ணகிரியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 93 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் தேசிய அடையாள அட்டையினை வழங்கினார்.
    • கிருஷ்ணகிரியில் கலெக்டர் தலைமையில் 2-வது கட்டமாக நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமினை மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி தொடங்கி வைத்து, 93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இம்முகாம் ஏற்கனவே ஓசூரில் நடைபெற்றது. நேற்று 2-வது கட்டமாக நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில், 93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இம்முகாமில், எலும்பு முறிவு, மனநல மருத்துவம், கண் மருத்துவம், காதுமூக்கு தொண்டை மருத்துவம், நரம்பியல் மருத்துவம், பொது மருத்துவம், கண் காது பரிசோதனை குறித்து சிறப்பு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய மந்திரி எல். முருகன் பேட்டி
    • “சாகர்மாலா பரிக்கிரமா” திட்டம் 6 மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் மாண்டியாவில் தொடங்கப் பட்டது.

    கன்னியாகுமரி :

    மத்திய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைமந்திரி புருஷோத்தம்ரூபாலா, இணை மந்திரிஎல்.முருகன் ஆகியோர் "சாகர்மாலா பரிக்கிரமா"என்ற கடல் பயணநிகழ்ச்சியின் மூலம் நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள கட ற்கரை கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து மீனவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

    இந்த நிகழ்ச்சி முடித்துவிட்டு மத்திய மந்திரிகள் நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    அங்கு வந்தமத்திய மந்திரிகளை நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்ற னர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மத்திய மந்திரி கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பயபக்தி யுடன் சாமி கும்பிட்டனர்.

    கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்தவிநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அயப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர், சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர்.

    அங்குஉள்ள மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள சிவன் பிரம்ம விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்க வடிவத்தில் காட்சி அளிக்கும் தாணுமாலய சாமியை தரிசனம் செய்தனர். திருவேங்கட விண்ணவர பெருமாள், 18அடிஉயர ஆஞ்சநே யர்உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி மீன்வளத் துறை இணை மந்திரி முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி கடல் வழியாக சுற்றுப்பயணம் செய்து மீனவர்களை சந்திக்கும் "சாகர்மாலா பரிக்கிரமா" திட்டம் 6 மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் மாண்டியாவில்தொடங்கப் பட்டது. இந்தயாத்திரையில் பிரதமர்மோடிகொண்டு வந்த திட்டங்களை மீனவர்க ளிடம் நேரடியாக எடுத்துச் செல்வதும்.

    மீனவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து உரையாடுவதுதான் இதன் நோக்கம்ஆகும்.மீன்வளத் துறையில் ரூ.38ஆயிரத்து 500 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

    இறால் ஏற்றுமதியில் இந்தியா2-வது இடத்தில் உள்ளது. கடல் உணவு ஏற்றுமதியில் உலகில் 4- வது இடத்தில் உள்ளோம். இந்திய பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி சென்றுகொண்டி ருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 8ஆயிரம்கிலோ மீட்டர் கடற்கரையில் 3ஆயிரம்கிலோ மீட்டர் தூரம் சென்று உள்ளோம்.

    இன்னும் 5ஆயிரம்கிலோ மீட்டர் தூரம் செல்ல உள்ளோம்.கன்னியாகுமரி மாவட்டத்தில்தேங்காப் பட்டணம், தூத்தூர், குறும்பனை, குளச்சல், முட்டம், வாணியக்குடி என பல பகுதிகளுக்கு சென்று வந்தோம்.

    இதனைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்துக்கு செல்ல உள்ளோம். சுதந்திரத்துக்கு பிறகு மீனவர்களை செங்கோட்டைக்கு அழைத்து உரையாற்றியது பிரதமர் மோடிதான். ஆழ்கடலில் மீன் பிடிக்க ஏற்கனவே 50 படகுகளுக்குமானியம் கொடுக்கப்பட்டுஉள்ளன.

    பாரம்பரிய மீன்பிடி தொழிலை ஊக்குவிக்க ரூ.1 கோடி 30 லட்சம் மதிப்புள்ள படகுகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. ஐ.எஸ்.ஆர்.ஓ. மூலம் மீன்பிடி தொழிலை நவீனப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    மீனவர்கள் கடல் வழியாக எந்த மாநிலத்துக்கும் செல்வதற்காக கோரிக்கை வைத்துஉள்ளனர். மாநிலம் விட்டு மாநிலம் செல்ல மீனவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட உள்ளது.

    இவ்வாறுமத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

    • அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை முகாம் நடைபெற்று வந்தது.
    • 3-வது செவ்வாய்க்கிழமைகளில் உத்திரமேரூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது செவ்வாய்க்கிழமைகளில் அரசு ஆஸ்பத்திரி எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை முகாம் நடைபெற்று வந்தது.

    இனி வரும் காலங்களில் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியிலும் மாதத்தின் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், 3-வது செவ்வாய்க்கிழமைகளில் உத்திரமேரூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நடைபெறும் முகாமில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 போன்றவற்றுடன் கலந்துக்கொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையுங்கள்.

    • மாவட்டத்தில் தற்போது வரையில் 31,142 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.

    திருப்பூர்:

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.விழாவுக்குத் தலைமை வகித்து மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கிவைத்த பின்னா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற வகையில் 13 வட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. திருப்பூா் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் மூலமாக 59 மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தற்போது வரையில் 31,142 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 40 சதவீத மனவளா்ச்சி குன்றியோா், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோா், தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோா், 75 சதவீதத்துக்கும் மேல் கை, கால் பாதிக்கப்பட்டோா் என மொத்தம் 5,670 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மாதந்தோறும் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லூரி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 277 பேருக்கு நிகழாண்டு ரூ.8.37 லட்சம் வழங்கப்படவுள்ளது. அதேபோல மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

    இதைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் தின விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

    இந்த நிகழ்ச்சியில், மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×