என் மலர்
நீங்கள் தேடியது "தூய்மை காவலர்கள்"
- தூய்மைக் காவலர்கள் ஊராட்சியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
- கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில், தூய்மைக் காவலர்கள் கிராம ஊராட்சிகளில் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து, உரமாக்குதல், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் மற்றும் ஊராட்சியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர். திடக்கழிவு மேலாண்மையில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
- சாத்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் தூய்மை காவலர்கள் கவுரவிக்கப்பட்டது.
- முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மரக்கன்றுகளை மாவட்ட வருவாய் அலுவலர் நட்டினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சத்திரப்பட்டி கிராமத்தில் மகாத்மாகாந்தி 154-வது பிறந்த நாளை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடந்தது.
இதில் அவர் பேசுகையில், உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது? என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது? இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது? என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம் ஆகும்.
நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். புதுமைப்பெண் திட்டம் என்பது அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மரக்கன்றுகளை மாவட்ட வருவாய் அலுவலர் நட்டினார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சியையும் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.
சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள் 3 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.






