search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரண்ட பொதுமக்கள்"

    • பொதுமக்கள் பலர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வந்திருந்திருந்தனர்.
    • பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளியில் சேர்த்தனர்.

    பு.புளியம்பட்டி:

    தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது.இதேபோல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்து பனையம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கோடை விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.மாணவர்கள் உற்சா கத்துடன் வகுப்பறைக்கு சென்றனர்.

    இதையொட்டி புளி யம்பட்டி, பனையம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வந்திருந்திருந்தனர்.

    மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளியில் சேர்த்தனர்.

    இதையடுத்து பள்ளிக்கு புதிதாக வந்த மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

    • பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் குறித்து கலெக்டரை நேரில் மனு அளித்தனர்.
    • ஒரு சிலர் இந்த மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று நடந்தது. பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் குறித்து கலெக்டரை நேரில் மனு அளித்தனர்.

    ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதிக்கு மின் மயானம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை அளித்து வந்தோம். இதன் பலனாக தமிழக முதல்-அமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈச்சனாரி அருகில் நடைபெற்ற அரசு விழாவில் ஒத்தக்கால் மண்டபத்திற்கு மின் மயானம் அமைக்க அடிக்கல் நாட்டினார். மற்றும் பேரூராட்சி மன்றத்திலும் அனைத்து கவுன்சிலர்களும் சேர்ந்து இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர்.

    கட்டும் பணி தொடங்கும் என்று நினைத்திருந்த போது ஒரு சிலர் இந்த மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் அருகே வீட்டு மனை பிரிவுக்காக வேண்டுமென்றே சிலர் பேரூராட்சிக்கும், அரசுக்கும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் பணி செய்ய வரும் அரசு அதிகாரிகளை தடுத்து வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி எங்களது பகுதிக்கு மின் மயானம் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    கோவை சுண்டக்காமுத்தூர் எம்ஜிஆர் தோட்டத்தை சேர்ந்த நரிக்குறவ மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கைகளில் பாசிமணி கோர்த்துக் கொண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். தோட்டத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் இடமானது கோவிலுக்கு சொந்தமானது. தற்போது பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி சேதம் அடைந்து வருகிறது. எனவே எங்களுக்கு வேறு பகுதியில் இலவச வீட்டு மனை வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது. 

    ×