search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக முன்னாள் எம்பி"

    திமுக முன்னாள் எம்பி கோவை ராமநாதன் உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். #DMKexMP #DMK #Ramanathan

    கோவை:

    தி.மு.க. முன்னாள் எம்.பி. கோவை மு.ராமநாதன் (87) வயது முதிர்வு காரணமாக வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு ராமநாதன் உயிர் பிரிந்தது.

    கோவை ராமநாதன் கோவை தென்றல் என்று அழைக்கப்பட்டவர். கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர் ஆவார்.

    1971-76 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். 1984-89 வரை கோவை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். 1996 கோவை தொகுதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    மு.ராமநாதன் மாநகர செயலாளர், தணிக்கை குழு உறுப்பினர், அறக்கட்டளை அறங்காவலர், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்து இருந்தார்.

    தற்போது உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

    கோவை ராமநாதனுக்கு ராமகாந்தம் என்கிற மனைவியும், பன்னீர் செல்வம், இளங்கோவன், மு.இரா. செல்வராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    ராமநாதன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் திருச்செங்கோடு எம்.பி., கந்தசாமி உள்பட தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். #DMKexMP #DMK #Ramanathan

    திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK
    திராவிட முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்ய சபாவில் தமிழகத்தின் பிரதிநிதியாக தோ்வு செய்யப்பட்டவர் வசந்தி ஸ்டான்லி (56). 

    2008 முதல் 2014 வரை திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த வசந்தி ஸ்டான்லி, பத்திரிகையாளராகவும்,  பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

    உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், வசந்தி ஸ்டான்லியின் உடல் சென்னை லாயிட்ஸ் காலனி வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணி வரை வைக்கப்பட உள்ளது. அதன்பின்னர் பாளையங்கோட்டை எடுத்துச் செல்லப்பட்டு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK
    கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கிய திமுக முன்னாள் எம்பியை ஒரிஜனல் லைசென்சை எடுத்து வரும்படி போலீசார் எழுதி வாங்கி அனுப்பினர். #DMK
    கோவை:

    தூத்துக்குடியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயதுரை. இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

    நேற்று கோவை வந்த இவர் இரவு 9 மணி அளவில் சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.அவர் கையில் ஒரு சூட்கேஸ் வைத்திருந்தார்.

    விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சூட்கேசை சோதனை செய்தனர். அப்போது சூட்கேசில் இருந்து சத்தம் கேட்டது.சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் 5 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் ஜெயதுரையிடம் விசாரித்தனர்.

    கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக லைசென்சு தன்னிடம் இருப்பதாக கூறிய அவர் தவறுதலாக தோட்டாக்களை சூட்கேசில் எடுத்து வந்து விட்டதாக கூறினார்.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கி லைசென்சுக்கான ஜெராக்சை காட்டினார். ஒரிஜனல் லைசென்சை இன்று கொண்டு வந்து காட்டுவதாக கூறினார். அவரிடம் போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினர். #DMK
    ×