search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் மகன் தற்கொலை"

    • மகன் லோகேஷ்வரனுக்கு திருமணமாகாத நிலையில், தாயுடன் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
    • லோகேஸ்வரன் ஆங்கிலத்தில் 4 பக்கங்களில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    சென்னை:

    சென்னை அருகே உள்ள ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 47). இவருக்கு ரமேஷ் என்பவருடன் திருமணமான நிலையில், லோகேஷ்வரன் (27) என்ற மகனும், மகளும் இருந்தனர். கணவர் ரமேஷ், பரமேஸ்வரியை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இவரது மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மகன் லோகேஷ்வரனுக்கு திருமணமாகாத நிலையில், தாயுடன் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

    பரமேஸ்வரி அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மகன் லோகேஷ்வரன் ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான எச்.வி.எப். தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற பரமேஸ்வரி இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது அவரது மகன் லோகேஷ்வரன் வீட்டில் படுக்கையறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதனால் மனம் தாங்காத அவர், மகன் தூக்கில் தொங்கிய அதே மின்விசிறி கொக்கியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதைத்தொடர்ந்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்த தாய், மகன் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட வீட்டை சோதனையிட்டபோது, லோகேஸ்வரன் ஆங்கிலத்தில் 4 பக்கங்களில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அதில் லோகேஸ்வரன் என்னுடைய சாவுக்கு யாரும் காரணமல்ல, எனது தாய் உள்பட யாரையும் விசாரிக்க கூடாது என்றும், என்னுடைய அம்மாவுக்கு வரவேண்டிய நிலத்தின் பாகத்தை எனது தாய் மாமாவுக்கு தந்து விடுங்கள், அவர்கள் நன்றாக இருக்கட்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தாய், மகன் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விஜயிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று ஜோதி கண்டித்தார்.
    • விஜய் தூக்கு போட்டுக்கொண்டது தெரியாமல் மகன் இப்படி உள்ளாரே என விரக்தியில் ஜோதியும் தூக்கு போட்டுக்கொண்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் விஜய் (வயது 25). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விஜய் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்தார். இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    விஜயிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று ஜோதி கண்டித்தார்.

    இதனால் விஜய் மன உளைச்சலில் காணப்பட்டார். நேற்று இரவு வீட்டின் அறையில் திடீரென விஜய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விஜய் தூக்கு போட்டுக்கொண்டது தெரியாமல் மகன் இப்படி உள்ளாரே என விரக்தியில் ஜோதியும் தூக்கு போட்டுக்கொண்டார்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய், மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு கொண்டதும், மகன் இறந்தது தெரியாமல் தாயார் தூக்கு போட்டுக்கொண்டதும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தாயை கவனித்துக் கொள்ள முடியாத வேதனையில் மகனும், மகனின் நிலைமையை எண்ணி தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • தாய்-மகன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 72). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சுப்புலட்சுமி மகன் கணேசன் (53). தச்சுத்தொழிலாளியான இவர் பாலவனத்தத்தில் மனைவி, மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் கணேசனுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் வயதான தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை என்ற வருத்ததிலும் கணேசன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று கடம்பன்குளத்தில் உள்ள தாயை சந்தித்து விட்டு வருவதாக கணேசன் வீட்டில் கூறிவிட்டுச் சென்றார். அங்கு தாயிடம் பேசிய கணேசன் தனது உடல்நல பாதிப்பு குறித்து கூறி கவலையடைந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அவரது தாயார் சுப்புலட்சுமியும் தனது நிலைமை குறித்து கூறியுள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி வீட்டில் இருந்த விஷத்தை தாயும் மகனும் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய்-மகன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாயை கவனித்துக் கொள்ள முடியாத வேதனையில் மகனும், மகனின் நிலைமையை எண்ணி தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் விசாரணையில் கணவர் வீரானந்தம், வீட்டு செலவிற்காக ஜெயபாரதிக்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளார்.
    • மன விரக்தியில் இருந்த ஜெயபாரதி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    பொன்னமராவதி:

    திருச்சி மாவட்டம் பாலகுறிச்சி அருகே உள்ள பெத்தக்கோன் பட்டியை சேர்ந்தவர் ஜெயபாரதி (வயது 36). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரானந்தம் (42) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு 8 வயதில் ஹரி என்ற மகன் உள்ளார்.

    வீரானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் ஜெயபாரதி தனது மகனுடன் பொன்னமராவதியில் உள்ள வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் இவர்களது வீடு கடந்த சில தினங்களாக பூட்டியே கிடந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தாயும், மகனும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவர்களின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கணவர் வீரானந்தம், வீட்டு செலவிற்காக ஜெயபாரதிக்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த ஜெயபாரதி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஜெயபாரதி எழுதி வைத்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர்.

    அதில் எங்கள் முடிவிற்கு யாரும் காரணமில்லை. என் குடும்ப சூழ்நிலை. எனது உடல்நிலை, எனது மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை தேடிக்கொண்டேன். எனது உடலை எனது தகப்பனாரிடமோ, கணவரிடமோ ஒப்படைக்க வேண்டாம். செத்த பிறகு கூட நான் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை.

    8 வருடமாக எனது கணவர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. என் மகனுக்கும் அவர் தந்தையாகவோ, எனக்கு கணவராகவோ அவர் இருந்ததில்லை. என்னுடைய மகனிடம் நீ போய் உங்கப்பாவிடம் இரு என சொன்னேன், ஆனால் அவன் கேட்காமல் என் கூடவே விஷமருந்தி விட்டார். இந்த வீட்டில் இருந்து ஒரு குண்டூசிகூட எனது கணவருக்கோ, தகப்பனார் வீட்டிற்கோ போகக்கூடாது என எழுதி வைத்துளாளர்.

    தாயும், மகனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முரளி ராஜ் பாரதி படித்து முடித்து வேலை தேடி வந்தார்.
    • கடந்த மாதம் சிதம்பரம் திடீரென மாரடைப்பால் இறந்தார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள சிதம்பரம் நகரை சேர்ந்தவர் சிதம்பரம். ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி சுபா (வயது 55). இவர்களுக்கு முரளிராஜ் பாரதி (35) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    முரளி ராஜ் பாரதி படித்து முடித்து வேலை தேடி வந்தார். கடந்த மாதம் சிதம்பரம் திடீரென மாரடைப்பால் இறந்தார். கணவரின் பிரிவை சுபாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக அவர் விரக்தியுடன் காணப்பட்டார்.

    நேற்று சிதம்பரம் இறந்த 30-வது நாள் அனுசரிக்கப்பட்டது. வாழ்க்கையில் விரக்தியில் இருந்த சுபா கணவரின் இறப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு மகன் முரளி ராஜ் பாரதியும் சம்மதித்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று இரவு இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை தாய்-மகன் இறந்து கிடப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அதில் 'நாங்கள் அப்பாவை தேடி செல்கிறோம். நாங்கள் தற்கொலை செய்வதற்கு யாரும் காரணம் இல்லை. அப்பாவுடன் இருந்த நாட்கள் மிகவும் சந்தோசமானவை. யாரும் கவலைபட வேண்டாம். அனைவரும் நீண்ட காலம் நலமுடன் வாழ்க' சுபா கையெழுத்திட்டு எழுதியிருந்தார்.

    இதே போல் முரளி ராஜ் பாரதியும் ஆங்கிலத்தில் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. அப்பாவின் பிரிவை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். இந்த 2 கடிதங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×