search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொமினிக் மார்ட்டின்"

    • படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
    • 12 வயது சிறுமி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் களமச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி யொகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபை நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன.

    இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    யொகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் முன்னாள் ஊழியரான அவர், அந்த சபையின் நடவடிக்கைகள் பிடிக்காமல் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறதா? என்று டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள்.

    அதில் அவர் மட்டுமே திட்டமிட்டு குண்டு வெடிப்பை நிகழ்த்திய விவரம் தெரிய வந்தது. குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

    இருந்தபோதிலும் அவர்களில் 12 வயது சிறுமி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இந்தநிலையில் களமச்ஆசேரி குண்டு வெடிப்பில் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இறந்துவிட்டார்.

    தொடுபுழா அருகே உள்ள கொடிக்குளம் வண்டமட்டம் பகுதியை சேர்ந்த லில்லி ஜான் (வயது71) என்ற அந்த பெண், கூட்டுறவு வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சாட்சிகள் அமைப்பின் பிரார்த்தனை கூட்டத்தில் தனது கணவர் ஜானுடன் பங்கேற்றார்.

    அப்போது நடந்த குண்டுவெடிப்பில் லில்லி, ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான அவரது கணவர் ஜான் ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் ஜான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    லில்லி தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவரும் பரிதாபமாக இறந்துவிட்டார். கணவன்-மனைவி இருவரும் இறந்து விட்டதால் அவர்களது குடும்பத்தினர் கவலைய டைந்தனர். லில்லி இறந்ததை யடுத்து களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

    • போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர்.
    • டொமினிக் மார்ட்டினை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கடந்தமாதம் 29-ந்தேதி கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பெண்கள், 12 வயது சிறுமி என 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்பு சதியின் பின்னணி பற்றி கண்டறிவதற்காக போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீசார் காவலில் எடுத்தும் விசாரித்து வந்தனர். கோர்ட்டு வழங்கிய போலீஸ் காவல் முடிவடைந்த தையடுத்து, டொமினிக் மார்ட்டினை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து டொமினிக் மார்ட்டின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • டொமினிக் மார்ட்டினிடம் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
    • வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்று ஆதாரங்களை திரட்டினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள், 12 வயது சிறுமி என 4 பேர் பலியாகினர். இது தொடர்பாக கொச்சி பகுதியை சேர்ந்த டொமி னிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின், கடந்த 31-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

    குண்டு வெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் டொமினிக் மார்ட்டினிடம் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து அவரிடம் கடந்த 6-ந்தேதி முதல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் குண்டு வெடிப்பை தான் மட்டுமே நிகழ்த்தியதாகவும், வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்ற கருத்தையே தொடர்ந்து கூறி வருகிறார்.

    இருந்தபோதிலும் போலீசார் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ள டொமினிக் மார்ட்டினிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்று ஆதாரங்களை திரட்டினர்.

    டொமினிக் மார்ட்டினின் வருமான ஆதாரங்கள், சர்வதேச தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார்கள்.

    டொமினிக் மார்ட்டினை அவரது வாடகை வீடு, திருச்சூரில் அவர் தங்கியிருந்த லாட்ஜ் உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளனர். டொமினிக் மார்ட்டினின் போலீஸ் காவல் வருகிற 15-ந்தேதி முடிகிறது.

    ×