search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி விபத்து"

    • பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர்.

    காஜியாபாத்:

    கிழக்கு டெல்லி காஜிப்பூரில் புத் பஜார் என்ற மார்க்கெட் உள்ளது. இங்கு எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். நேற்று இரவு 9.30 மணியளவில் பொதுமக்கள் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு கார் கூட்டத்தில் வேகமாக புகுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காஜியாபாத்தை சேர்ந்த சீதா தேவி என்ற 22 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் காரை சிறிது தூரம் விரட்டி பிடித்து டிரைவரை மடக்கி பிடித்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காரை டிரைவர் அதிவேகத்தில் ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடந்து சென்றவர்களை மோதியது தெரிய வந்துள்ளது.
    • தாறுமாறாக ஓடிய கார் நின்றிருந்த மேலும் 2 வாகனங்களிலும், சாலையோர கடைகள் மீதும் மோதியது.

    டெல்லி:

    டெல்லி மலை மந்திர் பகுதியில் வேகமாக சென்ற கார் தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்றவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்த 2 பேர் வசந்த் விகார் பகுதியை சேர்ந்த முன்னா, சமீர் என்பது தெரிய வந்தது.

    முதல்கட்ட விசாரணையில் காரை டிரைவர் அதிவேகத்தில் ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடந்து சென்றவர்களை மோதியது தெரிய வந்துள்ளது. தாறுமாறாக ஓடிய கார் அங்கு நின்றிருந்த மேலும் 2 வாகனங்களிலும், சாலையோர கடைகள் மீதும் மோதியது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டெல்லி கேசவ்புரத்தில் அதிகாலையில் நடந்த விபத்தில் ஸ்கூட்டர் மீது கார் ஒன்று மோதியது.
    • 5 மாணவர்கள் குடிபோதையில் கார் ஓட்டி வந்த போது இந்த விபத்து நடந்தது.

    டெல்லி கேசவ்புரத்தில் அதிகாலையில் நடந்த விபத்தில் ஸ்கூட்டர் மீது கார் ஒன்று மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்தவரும், பின்னால் இருப்பவரும் வாகனத்தின் பானட்டில் சுமார் 350 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தனர்.

    19 மற்றும் 21 வயது உடைய 5 மாணவர்கள் குடிபோதையில் கார் ஓட்டி வந்த போது இந்த விபத்து நடந்தது. இது தொடர்பாக 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைலாஷ் பட்நாகர் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் என்று தெரியவந்தது. பின்னால் இருந்தவர் சுமித் காரி என்று அடையாளம் தெரிந்தது.

    ×