

டெல்லி:
டெல்லி மலை மந்திர் பகுதியில் வேகமாக சென்ற கார் தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்றவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்த 2 பேர் வசந்த் விகார் பகுதியை சேர்ந்த முன்னா, சமீர் என்பது தெரிய வந்தது.
முதல்கட்ட விசாரணையில் காரை டிரைவர் அதிவேகத்தில் ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடந்து சென்றவர்களை மோதியது தெரிய வந்துள்ளது. தாறுமாறாக ஓடிய கார் அங்கு நின்றிருந்த மேலும் 2 வாகனங்களிலும், சாலையோர கடைகள் மீதும் மோதியது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.