என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி கொலை"
- பீகாரைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார்.
- போலீசார் பீகாருக்கு தப்பி செல்ல முயன்ற முகேஷை கைது செய்தனர்.
சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை சம்பவங்களுக்கு சொற்ப காரணங்களே கூறப்படுகிறது. இதற்கு முழு முதல் காரணமாக கோபம் தான் சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுக்கு கோபம் வந்தால் அவன் எவ்வித உச்சத்திற்கும் செல்லக்கூடியவனாகி விடுவான்.
அந்த வகையில், தான் முதலாளி திட்டியதால் அவரது மனைவி, மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
டெல்லியின் லஜ்பத் நகரை சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் குல்தீப் சேவானி. இவர் தனது மனைவி ருச்சிகா மற்றும் 14 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். கிருஷ்
குல்தீப் சேவானியிடம் பீகாரைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் முகேஷை, குல்தீப் சேவானியின் மனைவி ருச்சிகா திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், குல்தீப் சேவானி இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்து அவரது மனைவி, மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
குல்தீப், இரவு வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடித்துள்ளார். ஆனால் வீட்டின் கதவை யாரும் திறக்காததால், மனைவியும், மகனையும் செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் இருவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இதனிடையே கேட் அருகிலும், படிக்கட்டுகளிலும் ரத்தக்கறைகளை கண்ட குல்தீப், பதற்றம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ருச்சிகா படுக்கை அறையின் தரையிலும், மகன், குளியறையிலும் உயிரற்ற நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பீகாருக்கு தப்பி செல்ல முயன்ற முகேஷை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், குல்தீப் சேவானியின் மனைவி திட்டியதால் அவரையும் அவரது மகனையும் கொலை செய்ததை முகேஷ் ஒப்புக்கொண்டான். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டெல்லியில் பட்டப்பகலில் போலீஸ்காரரை திருடன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லி போலீசில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஷாம்பு தயாள். ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு மனைவி, ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயாபுரி பகுதியில் குடிசையில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவரின் செல்போனை பறித்து சென்றது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். குற்றவாளியை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவனது பெயர் அனிஷ் என்பது தெரியவந்தது. அவனை போலீஸ்காரர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
வழியில் திருடன் அனிஷ் சட்டையின் அடிப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரரை சரமாரியாக மீண்டும், மீண்டும் குத்தினான். கழுத்து, வயிறு, முதுகு பகுதியில் கத்தி குத்து விழுந்தது.
பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நடந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த யாரும் போலீஸ்காரரை காப்பாற்ற எந்த முயற்சியும் செய்ய வில்லை. அவர்கள் வேடிக்கை பார்த்தனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்பு இந்த கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்தது.
இதுபற்றி அறிந்த மற்ற போலீசார் அங்கு வந்து திருடன் அனிஷை மடக்கி பிடித்தனர். ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஷாம்பு தயாளை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். மூத்த போலீஸ் அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.
டெல்லியில் பட்டப்பகலில் போலீஸ்காரரை திருடன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மனைவியின் உடலை வெட்டி வீசுவதற்காக தனது நண்பர்கள் சிலரின் உதவியை நாடியுள்ளார்.
- தன்ராஜின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.
புதுடெல்லி:
தென்மேற்கு டெல்லியில் ஜனக்புரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கடந்த 3-ந்தேதி போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது ஒரு அறைக்குள் பெட்டி படுகைக்குள் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது வாய் வெள்ளை துணியால் கட்டப்பட்டு இருந்தது.
உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் தீபிகா சவுகான் (வயது26) என்பது தெரியவந்தது. மேலும் இவரது கணவர் தன்ராஜ் பிரபல பைக் டாக்ஸி செயலிகளின் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.
தன்ராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் சம்பாதிக்கும் பணத்தை முழுவதும் செலவழித்து வந்த அவர் குடும்ப செலவுக்காக மனைவியிடம் பணம் கொடுப்பது இல்லை. தீபிகா ஸ்பா ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.
இந்நிலையில் தீபிகாவின் நடத்தை மீது தன்ராஜுக்கு சந்தேகம் வந்துள்ளது. தீபிகா ஒரு ஆண் நண்பருடன் நெருங்கி பழகுவதாக சந்தேகப்பட்ட தன்ராஜ் கடந்த 29-ந்தேதி மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த அவர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் தீபிகாவின் உடலை பெட்டி படுக்கைக்கு இடையில் மறைத்து வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசி விட்டு தப்பி விடலாம் என திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக யூடியூப்பில் உடலை வெட்டுவதற்கான வழிகள் குறித்து வீடியோக்களையும் பார்த்துள்ளார்.
பின்னர் மனைவியின் உடலை வெட்டி வீசுவதற்காக தனது நண்பர்கள் சிலரின் உதவியை நாடியுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு தப்பி சென்ற அவர் பின்னர் ஜெய்ப்பூர், அமிர்தசரஸ் இடங்களுக்கும் சென்றுள்ளார்.
இந்நிலையில் மனைவியுடன் நெருங்கி பழகிய ஆண் நண்பரையும் கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டிய அவர் மீண்டும் டெல்லி திரும்பி உள்ளார். இதற்கிடையே தீபிகா உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அவரை தன்ராஜ் கொலை செய்து விட்டு தப்பி ஓடியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
தன்ராஜின் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் யூ.பி.ஐ. மூலம் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியதை கண்டுபிடித்த போலீசார் அவர் அமிர்தசரசில் இருந்து டெல்லிக்கு திரும்புவதையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், தன்ராஜை டெல்லி திரும்பும் வழியிலேயே மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் மனைவியுடன் பழகிய ஆண் நண்பரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியதையும் ஒப்புக்கொண்டதாகவும், அந்த திட்டத்தை முறியடித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






