என் மலர்
இந்தியா

திட்டியதால் ஆத்திரம்... முதலாளியின் மனைவி, மகனை கொடூரமாக கொன்ற கார் ஓட்டுனர்
- பீகாரைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார்.
- போலீசார் பீகாருக்கு தப்பி செல்ல முயன்ற முகேஷை கைது செய்தனர்.
சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை சம்பவங்களுக்கு சொற்ப காரணங்களே கூறப்படுகிறது. இதற்கு முழு முதல் காரணமாக கோபம் தான் சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுக்கு கோபம் வந்தால் அவன் எவ்வித உச்சத்திற்கும் செல்லக்கூடியவனாகி விடுவான்.
அந்த வகையில், தான் முதலாளி திட்டியதால் அவரது மனைவி, மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
டெல்லியின் லஜ்பத் நகரை சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் குல்தீப் சேவானி. இவர் தனது மனைவி ருச்சிகா மற்றும் 14 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். கிருஷ்
குல்தீப் சேவானியிடம் பீகாரைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் முகேஷை, குல்தீப் சேவானியின் மனைவி ருச்சிகா திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், குல்தீப் சேவானி இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்து அவரது மனைவி, மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
குல்தீப், இரவு வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடித்துள்ளார். ஆனால் வீட்டின் கதவை யாரும் திறக்காததால், மனைவியும், மகனையும் செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் இருவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இதனிடையே கேட் அருகிலும், படிக்கட்டுகளிலும் ரத்தக்கறைகளை கண்ட குல்தீப், பதற்றம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ருச்சிகா படுக்கை அறையின் தரையிலும், மகன், குளியறையிலும் உயிரற்ற நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பீகாருக்கு தப்பி செல்ல முயன்ற முகேஷை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், குல்தீப் சேவானியின் மனைவி திட்டியதால் அவரையும் அவரது மகனையும் கொலை செய்ததை முகேஷ் ஒப்புக்கொண்டான். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






