search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன் கேமிரா"

    • கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரை கொண்டு வாத்திய இசைக்குழு புதியதாக தொடங்கப்பட்டது.
    • மைதானத்தில் ஊர்க்காவல் படை பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது.

    கோவை:

    கோவை மாநகர போலீசார் மற்றும் தனியார் கல்லூரி ரோபோடிக் துறையுடன் இணைந்து கலவர நேரங்களில் டிரோன் காமிரா மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

    அதன்படி டிரோன் கேமிரா மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் டிரோனை எவ்வாறு கையாள்வது, குறிப்பிட்ட இடத்தில் கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு வீசுவது போன்று செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் கலவரம் ஏற்படுவது போன்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். அப்போது கலவர இடத்தில் டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்துவது போன்றும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன், உதவி கமிஷனர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அதே மைதானத்தில் ஊர்க்காவல் படை பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதனை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

    இந்த பயிற்சி விழா கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில், ஊர்க்காவல் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 26 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 33 பேர் கலந்துகொண்டனர்.

    இதனைதொடர்ந்து போலீஸ் கமிஷனரின் அறிவுரையின்படி, கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரை கொண்டு வாத்திய இசைக்குழு புதியதாக தொடங்கப்பட்டது.

    இந்த இசைக்குழுவினை பொதுமக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளுக்கு கட்டண அடிப்படையில் பயன்படுத்தலாம். 2 மணி நேரத்திற்கு ரூ. 10 ஆயிரமும், 3 மணி நேரத்திற்கு ரூ,12,500-ம், 4 மணி நேரத்திற்கு ரூ. 15 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
    • 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி களில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகே உள்ள உள்ள கிராம பகுதிகளில் புகுந்து அட்ட காசம் செய்து வருகிறது.

    அதே போல் தாளவாடி வனச்சர கத்துக்கு உட்பட்ட வன ப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்ட த்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இநத நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி சேசன் நகர் கிராமத்தில் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி கால்நடைகளை தொடர்ந்து அடித்து கொன்று வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனத்துறையினர் 2 டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இன்று 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர்.

    மேலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலி யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் புலியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை யினர் தெரிவி த்தனர்.

    ×