search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎம்சி"

    • குடிநீர் தேவை ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் மில்லியன் கனஅடி தேவையாக உள்ளது.
    • சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய ஏரிகள், கல்குவாரி குட்டைகளை அதிகாரிகள் மேம்படுத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி. ஏரியில் 1081 மில்லியன் கனஅடி (1.08 டி.எம்.சி.) மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

    இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் வரும் ஆண்டுகளில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னையில் குடிநீர் தேவை ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் மில்லியன் கனஅடி தேவையாக உள்ளது.

    வரும் ஆண்டுகளில் குடிநீர் தேவை 25 ஆயிரம் மில்லியன் கனஅடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய ஏரிகள், கல்குவாரி குட்டைகளை அதிகாரிகள் மேம்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சோழவரம் ஏரியின் நீர்மட்டத்தை 18.86 அடியில் இருந்து 22 அடியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    ஏரியை ஆழப்படுத்தி தற்போதைய கொள்ளளவை விட 3 மடங்கு அதிகரிக்கப் பட உள்ளது. தற்போது சோழவரம் ஏரியில் 1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே (1081 மி.கனஅடி) தேக்கி வைக்க முடியும். இது 3 டி.எம்.சி. ஆக உயர்த்தப்பட இருக்கிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சோழவரம் ஏரியில் நீர் இருப்பை 3 டி.எம்.சி. ஆக அதிகரிக்க திட்டம் உள்ளது. இது தொடர்பாக திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த பணிக்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்றனர்.

    ×