search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுதானிய உணவு"

    • உடல் ஆரோக்கியத்துக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டிய அவசியம்
    • 7 நாட்களாக பள்ளி, கல்லூரிகளில் சிறு தானியங்களின் விழிப்புணர்வு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    திருப்பூர் : 

    உடல் ஆரோக்கியத்துக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டிய அவசியம், தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக தான் இந்தாண்டை சிறுதானிய ஆண்டாக ஐ.நா.,சபை அறிவித்துள்ளது. கடந்த 7 நாட்களாக பள்ளி, கல்லூரிகளில் சிறு தானியங்களின் விழிப்புணர்வு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    விழிப்புணர்வு மட்டும், பலன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் அளவில் சிறு தானியங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டியது அவசியம் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர் மத்தியில், சிறுதானியங்கள் பயன்பாடு அதிகப்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழுவினர் மாணவர்களுக்கு சிறு தானிய உணவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர். 

    • காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.
    • சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் 21 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லூரியின் பெயர் பலகையும் திறந்துவைக்கப்பட்டது.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    புதுவையில் கல்வித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்து, நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசு கவனம் செலுத்தும்.

    புதுவை அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தில் முன்பு ரொட்டி மற்றும் பால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பால் மட்டும் வழங்கப்படுகிறது. மீண்டும் காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.

    புதிய திட்டமாக மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு சிறுதானிய உணவும் வழங்கப்படும். அதாவது சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். படிக்கும் மாணவர்களுக்கு அது புத்துணர்வு அளிப்பதாக இருக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பு மாணவர்களின் சோர்வை போக்கவே சிறுதானிய உணவு வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    • பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவு தயாரித்து வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிரான பேரியக்கம் சார்பில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவு தயாரித்து வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.

    ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி தாசன், பட்டுக்கோட்டை தங்க குமரவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேல்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் வேலுமணி, விக்னேஷ், அருசீர் தங்கராசு, பொய்யாமொழி, வெள்ளைச்சாமி பாக்கியராஜ் அருண் சுபாஷ், செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு பாரம்பரிய உணவுகளான அரிசி மற்றும் சிறுதானியங்களில் போதிய சத்துக்கள் இருக்கும் போது செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் தயிர் சாதம், தக்காளி சோறு, தேங்காய் சாதம், சர்க்கரை பொங்கல், அவல் கஞ்சி போன்ற உணவுகளை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

    இது குறித்து ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் கூறும் போது, பாரம்பரிய அரிசி சிறுதானியங்களை கட்டுப்படியான விலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதற்கட்டமாக 25 சதவீதம் வழங்கிட வேண்டும்.

    பின் படிப்படியாக 100 சதவீதம் வழங்கிட வேண்டும்.

    2023 ஆம் ஆண்டை சிறுதானிய பயிர்களின் ஆண்டாக உலகளவில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக அரசு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசார இயக்கங்கள் நடத்திட வேண்டும்.

    பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானியம் போன்ற உணவுப்பயிர்களை சாகுபடி செய்பவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்றார்.

    ×