search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சல்மான் குர்ஷித்"

    • கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களை காங்கிரஸ் பின்பற்றும்.
    • நாங்கள் எந்த கடிதத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

    லக்னோ:

    ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை ஜனவரி 3 ஆம் தேதி பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியா விட்டால், பாத யாத்திரையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கடந்த செவ்வாயன்று கடிதம் எழுதியிருந்தார்.

    கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் காங்கிரஸ் பின்பற்றும் என்றும், ஆனால் பாத யாத்திரை நிறுத்தப்படாது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    ஜனநாயக அமைப்பில், ஒவ்வொரு கட்சிக்கும், தனி மனிதனுக்கும் தங்கள் கருத்தைப் பேச உரிமை உண்டு. காங்கிரஸ் யாத்திரையைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறது, அதனால்தான் பல்வேறு உத்தரவுகள் வெளியிடப்படுகின்றன. கொரேனாவிற்கு பயப்படாதவர்கள், பாத யாத்திரைக்கு பயப்படுகின்றனர். நாங்கள் எந்த கடிதத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

    இந்த பாத யாத்திரையை நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து தேவையான அனுமதியை காங்கிரஸ் பெற்றுள்ளது. பாஜக அரசு நிர்வாகத்தின் மூலம் அதைத் தடுக்க முயன்றால் ஜனநாயக அமைப்புகளுக்கு அது பதில் சொல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி முக கவசம் அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தது குறித்து பதிலளித்த குர்ஷித், பிரதமர் மோடி மிகச் சிறந்த நாடக கலைஞர் என்று கூறியுள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
    மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சல்மான் குர்ஷித்தின் வீடு உத்தரகாண்டில் உள்ள நைனிடால் உள்ளது. இந்த வீட்டிற்கு சிலர் திடீரென தீ வைத்துள்ளனர்.

    வீடு தீப்பற்றி எரியும் படத்தை சல்மான் குர்ஷித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ராகேஷ் கபில் மற்றும் 20 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    ×