search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை அருகே"

    • கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
    • படுகாயம் அடைந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    கோவை,

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியை சேர்ந்தவர் ராஜூ(வயது50). இவரது மனைவி சம்ளா(43). இவர்களது மகள் ஆயிஷா (18) மகன் இஷான் (14).

    தற்போது பள்ளிகள் கோடை விடுமுறை என்பதால் அனைவரும் காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கு ஜாலியாக சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர்.

    கார் கோத்தகிரி ரோட்டில் பவானி சாகர் காட்சி முனை அருகே சென்ற போது திடீரென காரின் பிரேக் பிடிக்காமல் போனது.

    அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சத்தியவேணி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் சத்தியவேணியின் மொபட் மீது மோதியது.

    கவுண்டம்பாளையம்

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வஞ்சிமாநகரை சேர்ந்தவர் முனுசாமி.

    இவரது மனைவி சத்தியவேணி(வயது53). இவர் பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இவர் சம்பவத்தன்று மாலை தனது வீட்டில் இருந்து மொபட்டில் வேலை விஷயமாக நரசிம்ம நாயக்கன் பாளையத்திற்கு சென்றார். அங்கு வேலையை முடித்து விட்டு மீண்டும் கோவை –மேட்டுப்பாளையம் ரோட்டில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    இவரது மொபட் தெற்குபா ளையம் பிரிவு அருகே வந்து கொண்டி ருந்தது.

    அப்போது இவருக்கு பின்னால் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென பின்னால் வேகமாக வந்த வேன் , கண்ணிமைக்கும் நேரத்தில் சத்தியவாணியின் மொபட் மீது மோதியது.

    இதில் சத்தியவாணி மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

    இதுகுறித்து பெரியநா யக்கன்பாளையம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். இந்த நிலையில் இந்த விபத்து காட்சிகள், அந்த பகுதியில் இருந்த டீக்கடையில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோவில், சத்தியவாணி மொபட்டில் வந்து கொண்டிருக்கிறார்.அப்போது பின்னால் வந்த வேன் திடீரென வேகமாக வந்து மொபட் மீது மோதுகிறது. அத்துடன் நிற்காமல் சத்தியவாணிக்கு முன் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதுகிறது.

    மோதிய வேகத்தில் மொபட்டில் இருந்த தலைமை ஆசிரியை தூக்கி சாலையில் வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

    அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் அமைந்துள்ளது.

    ×