search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோகுல இந்திரா"

    • தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று முடிவெடுத்தது தான் எடப்பாடி பழனிசாமியின் தைரியம்.
    • சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். அ.தி.மு.க. அண்ணா பெயரை தாங்கி நிற்கின்ற கட்சி. உங்களுக்கு நாங்கள் அடிமை அல்ல.


    நாங்கள் ஒரு தாம்பாளத்தில் 2 கோடி தொண்டர்களை வைத்துள்ளோம். உங்களிடம் போய் அடிமை சாசனம் வாசிக்க தேவையில்லை. தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று முடிவெடுத்தது தான் எடப்பாடி பழனிசாமியின் தைரியம். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

    மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமித்ஷா தமிழகம் வந்தாராம் பத்து தொகுதி எங்களிடம் கொடுத்து விடுங்கள். 10 தொகுதி மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்கிறோம் என தெரிவித்தாராம்.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி என பிரித்துக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்வது இ.பி.எஸ். மட்டுமே அமித்ஷா இல்லை. எதிரி மற்றும் துரோகிகளை சமாளித்து மத்தியில் இருக்க கூடியவர்களின் மிரட்டல்களை சமாளித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுகொண்டு எழுந்து வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாமெல்லாம் கோவிலாக நினைக்கக்கூடிய கட்சி அலுவலகத்தை கடப்பாறை கொண்டு உடைத்து அராஜகம் செய்தவர் ஓ.பி.எஸ்.
    • ஓ.பி.எஸ். இந்த முறை தர்மயுத்தம் போட முடியவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுக்குழுவுக்கான தீர்ப்புக்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீர்ப்பு வெளி வருவதற்கு முன்பே நீதிபதி என்ன சொல்ல போகிறார் என்று தெரிவதற்கு முன்பே வீட்டில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகத்துக்கு புறப்பட்டார். அவருடைய பாதுகாப்புக்கு வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சென்றுள்ளனர். அவரது ஆதரவாளர்கள் உருட்டு கட்டை, கடப்பாறை போன்ற ஆயுதங்களை கொண்டு வந்துள்ளனர்.

    நாமெல்லாம் கோவிலாக நினைக்கக்கூடிய கட்சி அலுவலகத்தை கடப்பாறை கொண்டு உடைத்து அராஜகம் செய்தவர். கட்சியை அழிக்க எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி அலுவலகத்தை மூடியது சில்லறைத்தனமானது.

    ஓ.பி.எஸ். இந்த முறை தர்மயுத்தம் போட முடியவில்லை. ஒரு தலைவராக இருந்தவர் இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபட்டது, அவர் மீது இருந்த சிறிய அளவிலான மரியாதை கூட இல்லாமல் போனது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்து இருந்தால் தி.மு.க.விற்கு நல்லாட்சி சான்றிதழ் ரவீந்திரன் எம்.பி. கொடுத்து இருப்பாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×