search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரும்பூர்"

    • உமா எஸ்தர் குரும்பூர் ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • உமா கழுத்தில் கிடந்த 4 ½பவுன் தாலி செயினை மர்ம நபர் பறித்து கொண்டு தப்பி சென்றார்.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள யோகரத்தினம் நகரை சேர்ந்தவர் அருள்தாஸ் மனைவி உமா எஸ்தர் (வயது 41). இவர் நேற்று காலை குரும்பூர் ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் உமா கழுத்தில் கிடந்த 4 ½பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • தந்தை, மகனான மகேந்திரன், சதிஷ் ஆகியோர் பழக்கடை நடத்தி வருகின்றனர்.
    • அங்கமங்கலம் தோணிபாலம் அருகே சதிஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    குரும்பூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் அடுத்த மாரியம்மாள்புரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் சதிஷ் (வயது 23). இவரும், இவரது தந்தையும் திருச்செந்தூர் கே.டி.சி. டெப்போ அருகே பழக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த மாசானமுத்து (25) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சதிஷ் பைக் வாங்குவதற்காக திருச்செந்தூர் வங்கியில் ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொண்டு வங்கியிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது இவரை பின் தொடர்ந்து வந்த மாசானமுத்து, உன் தந்தை என்னிடம் வாங்கிய கடன் ரூ.1 லட்சத்தை தரவில்லை என்று தகராறு செய்து, அந்த பணத்தை பறித்து கொண்டு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த சதிஷ் அங்கமங்கலம் தோணிபாலம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது.
    • 10-ம் நாளான ஏப்ரல் 4-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை யொட்டி காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. காலை மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிகால சிறப்பு பூஜை நடந்தது. இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து விழாவின் 6-ம் நாளான வருகிற 31-ந் தேதி பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறும். 10-ம் நாளான ஏப்ரல் 4-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஹோமமும், 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு மேல் பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 10 நாட்களும் இரவு 8 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை நிர்வா கிகள் ஆத்திக்கண் நாடார், அகோபால் நாடார், உதய குமார் நாடார், தினேஷ் நாடார், செந்தில் நாடார், நாராயணராம் நாடார், சுப்பிரமணியன் நாடார், கண்ணன் நாடார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அய்யனார்-அம்பாள்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டிருந்த காட்சி.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அய்யனார்-அம்பாள்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டிருந்த காட்சி.


     


    • பங்குனி உத்திர திருவிழா 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • விழாவின் 6-ம் நாளான 31-ந்தேதி அன்னதானம் நடக்கிறது.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (26-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. இதையொட்டி காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிகால சிறப்பு பூஜையும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் வலம் வருதலும் நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து விழாவின் 6-ம் நாளான 31-ந்தேதி பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 10-ம் நாளான வருகிற

    (4-ந்தேதி) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஹோமமும், 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு மேல் பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    திருவிழாவின் 10 நாட்களும் இரவு 8 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஆத்திக்கண் நாடார், அகோபால் நாடார், உதயகுமார் நாடார், தினேஷ் நாடார், செந்தில் நாடார், நாராயணராம் நாடார், கண்ணன் நாடார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • கோட்டார்விளையில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.
    • ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர்,வக்கீல் பாக்யராஜ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள கோட்டார்விளையில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள், மாணவ, மாணவர்கள், பெண்கள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினார். வெற்றி பெற்றவர்களுக்கு ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் மற்றும் தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு வக்கீல் பாக்யராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

    இந்த விழாவில் குரும்பூர் தி.மு.க. நகர செயலாளர் பாலம் ராஜன், ஊர் தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை கோட்டார்விளை நாடார் இளைஞர் அணியினர் செய்திருந்தனர். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • முத்துக்குமார் என்ற மதுரை முத்து கடந்த ஆறு மாதங்களாக குரும்பூரில் வீடு எடுத்து தங்கி வருகிறார்.
    • மாரியப்பனை, முத்துக்குமார் அரிவாளை எடுத்து காலில் வெட்டி கொலை மிரட்டல் வைத்துள்ளார்.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள அழகப்பப்புரத்தை சார்ந்தவர் மாரியப்பன் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது நண்பர் தூத்துக்குடி அண்ணா நகர் சார்ந்த முத்துக்குமார் என்ற மதுரை முத்து (32). இவர் கடந்த ஆறு மாதங்களாக குரும்பூரில் வீடு எடுத்து தங்கி வருகிறார். கடந்த சில நாட்களாக மாரியப்பன், முத்துக்குமார் மனைவியிடம் அடிக்கடி தண்ணீர் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. முத்துக்குமார் வீட்டு அருகே நடந்து வந்தபோது மாரியப்பனை, முத்துக்குமார் தனது வீட்டில் உள்ள அரிவாளை எடுத்து காலில் வெட்டி கொலை மிரட்டல் வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குரும்பூர் போலீசார் நண்பனை அரிவாளால் வெட்டிய முத்துக்குமாரை கைது செய்தனர்.

    • விக்னேசை அவரது நண்பர்கள் கொலை செய்தது தெரியவந்தது.
    • மதுபாட்டில், கத்தியால் விக்னேசை குத்தினோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    குரும்பூர்:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது28). இவர் குரும்பூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் கடந்த 28-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் அவரது நண்பர்கள் விக்னேசை கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து தூத்துக்குடி பூபாலராயபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (28), ராமலட்சுமணன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசில் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    கடந்த 28-ந்தேதி நாங்களும், விக்னேசும் சேர்ந்து ஆமுகநேரியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி மதுக்குடித்தோம். பின்னர் மோட்டார் சைக்கிளில் குரும்பூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதிக்கு சென்றோம்.

    அங்கு வைத்து 3 பேரும் மீண்டும் மதுக்குடித்தோம். அப்போது எங்களுக்கும், விக்னேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் விக்னேசை மதுபாட்டில், கத்தியால் குத்தினோம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டோம்.

    இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கொலை தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த சிவா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வாலிபர் பாட்டிலால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • மது குடித்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக விக்னேஷ் கொலை செய்யப்பட்டது தெரிவவந்தது.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ளது தண்ணீர்பந்தல் கிராமம்.

    வாலிபர் கொலை

    இங்குள்ள சாஸ்தா கோவில் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பாட்டிலால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்டவர் விபரம் தெரியாததால் அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் இறங்கினர்.

    அடையாளம் தெரிந்தது

    அதற்காக போலீசாரின் வாட்ஸ்அப் குரூப் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கு கொலை செய்யப்பட்ட வாலிபரின் உருவப்படத்தை அனுப்பி வைத்தனர்.

    அப்போது கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள சங்கராப்பேரியை சேர்ந்த மாடசாமி மகன் விக்னேஷ் (வயது25) என்பது தெரியவந்தது.

    தனிப்படை

    இதைத்தொடர்ந்து அவரை கொலை செய்யவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    சம்பவ இடத்தில் காலி மதுபாட்டிகள் கிடந்ததாலும், விக்னேஷ் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டதாலும் அவர் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

    நண்பரிடம் விசாரணை

    அப்போது நண்பர்களுடன் மது குடித்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக விக்னேஷ் கொலை செய்யப்பட்டது தெரிவவந்தது. இதைத்தொடர்ந்து அவருடன் மதுக்குடித்த நண்பர்கள் குறித்து விசாரித்தனர்.

    இது தொடர்பாக தனிப்படையினர் விக்னேஷ் நண்பர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ×