search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்ப விழா"

    • காரைக்குடியில் மருத்துவர்கள் தின குடும்ப விழா நடந்தது.
    • இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை சார்பில் நடந்தது.

    காரைக்குடி

    இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை சார்பில் மருத்துவர்கள் குடும்ப விழா காரைக்குடியில் நடந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கி மருத்துவதுறையில் சிறப்பாக பணிபுரிந்து கொண்டிருக்கும் 33 மூத்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் ஜெயலால், கனக சபாபதி, சிங்காரவேல், ஸ்ரீதர், ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி கிளை சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை சுற்றுவட்டார பகுதிகளில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் நட முடிவு செய்யப்பட்டது.

    முதற்கட்டமாக முதல் மரக்கன்றை இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை தலைவர் சந்திரமோகன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் வழங்கினார்.காரைக்குடி கே.எம்.சி கிளை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

    • தேர்பவனி 4-ந் தேதி நடக்கிறது
    • விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்குப் பேரவை, அருட் சகோதரிகள், பங்கு தந்தை ஆகியோர் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய குடும்ப விழா நேற்று மாலை 6.45 மணிக்கு கொடி யேற்றம், கூட்டு திருப்ப லியுடன் தொடங்கியது. விழாவிற்கு முன்னாள் பங்கு தந்தை அருட்பணி செல்லையன் தலைமை தாங்கினார்.

    2-ம் நாளான இன்று (28-ந் தேதி) மாலை அகத்தியமுனி குழந்தைகள் நல மருத்துவ மனை இயக்குனர் அருட்பணி லியோன் ஹென்சன்   தலைமையில் மேலஆசாரிபள்ளம் பங்கு தந்தை அருட்பணி சுதர்சன் மறையுரையாற்றுகிறார்.

    3-ம் நாள் அருட்பணி ஜாண் ராபர்ட் ஜூலியஸ் தலைமையில் தேவசகாயம் மவுண்ட் பங்கு தந்தை அருட்பணி மைக்கேல் ஜார்ஜ் பிரைட்டும், 4-ம் நாள் கீழமணக்குடி பங்குதந்தை ஆன்றனி பிரபு தலைமையில் குளச்சல் இணை பங்கு தந்தை அருட்பணி விஜின் பிரைட்டும், 5-ம் நாள் புனித அலோசியஸ் இளங்குருமடம் அதிபர் அருட்பணி பஸ்காலிஸ் தலைமையில் ஆற்றுப்படுத்துதல் பணிக்குழு செயலர் அருட்பணி சுதன் ஸ்டார் மறையுரையாற்றுகின்றனர்.

    6-ம் நாள் விழாவான வருகிற 1-ந் தேதி மாலையில் பெரியகாடு புனித அந்தோனியார் திருத்தல அதிபர் அருட்பணி பிரான்சிஸ் போர்ஜியா தலைமையில் சகாயபுரம் புனித சகாய அன்னை திருத்தலம் அதிபர் ேஜாசப் ரொமால்டும், 7-ம் நாள் கன்னியாகுமரி பங்கு தந்தை அருட்பணி ஆன்றனி அல்காந்தர் தலைமையில் சூழால் பங்கு தந்தை அருட்பணி மார்ட்டினும் மறையுரையாற்றுகின்றனர்.

    8-ம் நாள் மாலை 6.15 மணிக்கு  ஜெபமாலை, புகழ் மாலை, 6.45 மணிக்கு கூட்டுத் திருப்பலி நடக்கிறது. ஆயர் இல்லம் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி தாளாளர் அருட்பணி மரிய கிளாட்ஸ்டன் தலைமையில் கோட்டார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு செயலர் அருட்பணி ஜெனிபர் எடிசன் மறை யுரையாற்றுகிறார்.

    9-ம் திருவிழா வருகிற 4-ந் தேதி காலையில் கன்னியாகுமரி இணை பங்கு தந்தை அருட்பணி சகாய வினட் மேக்சன் மறையுரையாற்று கிறார். மாலையில் கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஹிலாரியுஸ் தலைமையில் அனந்தன்நகர் பங்கு தந்தை அருட்பணி மை்கேல் ஏஞ்சலூஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு பனிமய அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

    10-ம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும, அருட்பணி எம்.சி.ராஜன் தலைமையில் கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணி ஏ.எஸ்.ஆனந்த் மறையுரையாற்றுகிறார். மாலையில் தேர் பவனி நடக்கிறது. தொடர்ந்து 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்குப் பேரவை, அருட் சகோதரிகள், பங்கு தந்தை ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • கீழக்கரையில் போலீசார் குடும்ப விழா நடைபெற்றது.
    • காவல் நிலையத்தில் பணி புரியும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் பணி சுமையை குறைத்து, புத்துணர்வு அளிக்கும் வகையில், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் கீழக்கரையில் போலீசார் குடும்ப நிகழ்ச்சி நடந்தது.

    இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் முன்னிலை வகித்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்குசாமி, மாடசாமி, மலைராஜ், சல்போன் உள்பட கீழக்கரை உட்கோட்ட பிரிவில் உள்ள காவல் நிலையத்தில் பணி புரியும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடந்தன.அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கீழக்கரை போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் செய்திருந்தார்.

    ×