search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி தாய்"

    • அம்பாள் பெயர், “சௌந்தர நாயகி, மின்னனையாள்” என்பதாகும்.
    • இங்குள்ள நடராசர், அற்புதமான வேலைப்பாடுடைய, பெரிய அழகுமிக்க மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

    திருப்பூவனம் புஷ்பவனேஸ்வரர் வைகை தீர்த்தம்

    வைகைக் கரையில் அமைந்துள்ள இத்திருகோவிலுக்கு, வைகை ஆறே தீர்த்தமாக உள்ளது.

    இத்தலத்து இறைவன் பெயர், "புஷ்பவனேஸ்வரர், பூவன நாதர்" என்பனவாகும்.

    அம்பாள் பெயர், "சௌந்தர நாயகி, மின்னனையாள்" என்பதாகும்.

    தல மரம், பாலமரம் ஆகும். தேவார பாடல் பெற்ற திருத்தலம், இது.

    இங்குள்ள நடராசர், அற்புதமான வேலைப்பாடுடைய, பெரிய அழகுமிக்க மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

    இங்கு பங்குனியில் பெரும் விழா நடைபெறுகிறது.

    காசிக்கு சமமான தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மூலவர் சிவலிங்கத் திருமேனி அழகான மூர்த்தம், நிறைவான தரிசனம் இது.

    பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து, இரசவாதம் செய்து, அவளுக்கு பொன்னைக் கொடுக்க, அதனை வைத்து அவள் இங்கு சிவலிங்கம் அமைத்து, வழிபட அதுவும் மிகவும் அழகாக இருப்பதைக் கண்டு ஆசையுடன் அந்த சிவலிங்கத்தைக் கிள்ளி முத்தமிட்டாளாம்.

    இவ்வாறு அவள் கிள்ளிய அடையாளம் சிவலிங்கத்தில் உள்ளதை இன்றும் காணலாம்.

    இக்கோவிலில் "பொன்னனையாள்", "சித்தர்கள்" ஆகியோர் உருவங்கள் உள்ளன.

    திருவாசகத்திலும், கருவூர்த் தேவரின் திவிசைப்பாவிலும் இத்தலம் போற்றப்படுகிறது.

    பிரம்மன் வழிபட்ட தலம், இது.

    இத்தலத்தில் உள்ள கொடுங்கைகள் மிகவும் அழகானவை.

    அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவருக்கும் வைகை மணல், சிவலிங்கமாக தோன்றியதால், மூவரும் மறுகரையில் இருந்தே இக்கரையை மிதிக்க அஞ்சி வணங்க, அதற்கு இறைவன் அவர்கள் நேநேர கண்டு வணங்குவதற்கு ஏதுவாக, நந்தியை விலகச் செய்தருளினார்.

    அதனால் இத்தலத்தில் இன்றும் இந்த நந்தி சாய்ந்துள்ளதைக் காணலாம்.

    வைகையின் மறுகரையில் இருந்து அவர்கள் தொழுத இடம், "மூவர் மண்டபம்" என்று அழைக்கப்படுகிறது.

    இத்தலம், புஷ்பவன காசி, பிதுர் மோட்சபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம்" என அழைக்கப்படுகிறது.

    இத்தலத்து தீர்த்தமான வைகை ஆறு வடக்கு நோக்கி, "உத்தரவாகினி"யாக இங்கு ஓடுகிறது.

    எனவே, இந்த தீர்த்தம் விசேஷமாகக் கூறப்படுகிறது.

    • இத்தலத்து இறைவன் பெயர் “விருத்தகிரீஸ்வரர், பழமலை நாதர்” என்பதாகும்.
    • இத்தலத்து விநாயகர் “ஆழத்துப்பிள்ளையார்” என அழைக்கப்படுகிறார்.

    விருத்தாசலம் மணிமுத்தாறு தீர்த்தம்

    "திருமுதுகுன்றம்" என அழைக்கப்படும், விருத்தாசலம் "பழமலை நாதர் திருக்கோவிலில்" உள்ளது "மணிமுத்தாறு தீர்த்தம்".

    இத்தலத்து இறைவன் பெயர் "விருத்தகிரீஸ்வரர், பழமலை நாதர்" என்பதாகும்.

    அம்பாள் பெயர், "விருத்தாம்பிகை, பெரிய நாயகி பாலாம்பிகை" என்பதாகும்.

    இத்தலத்து மரம், "வன்னி" ஆகும். இத்தலத்து விநாயகர் "ஆழத்துப்பிள்ளையார்" என அழைக்கப்படுகிறார்.

    இது ஒரு தேவாரத் தித்தலம். இத்தலத்தை, அருணகிரி நாதர், குரு நமசிவாயர் சிவப்பிரகாசர், வள்ளலார் முதலிய மகான்கள் புகழ்ந்து பாடியுள்ளார்.

    இத்தலத்தில் மாசிமகப் பெருவிழாவும், ஆடிப்பூரத் திருக்கல்யாணமும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

    பிரம்மனும், அகத்தியரும் வழிபட்ட திருத்தலம், இது. முருகக் கடவுள் 28 ஆகமங்களையும் சிவலிங்கமாய் வைத்து பூசித்த தலம், இது.

    சுந்தரர் இத்தலத்து இறைவனை வேண்டி பொன்னைப் பெற்று, இங்குள்ள மணிமுத்தாற்றில் போட்டு திருவாரூர் கமலாலயத்தில் எடுத்துக் கொண்டார்.

    இத்தலத்திற்கு "விருத்தகாசி" என்ற பெயரும் உண்டு. இத்தலம் முக்தி தரும் தலங்களுள் ஒன்றாகும்.

    இத்திருத்தலத்தின் தீர்த்தமாகிய மணிமுத்தாற்றில், இந்த ஆலயத்தின் வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே உள்ள "வடபால் மணிமுத்தாற்றில்" நீராட வேண்டும்.

    இவ்விடமே "புண்ணிய மடு" என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் நீராடி, பிள்ளையார், இறைவன், அம்பாளை வழிபட முக்தி நிலை கிட்ட சிறந்தொரு பரிகாரமாகும்.

    • “கற்பகநாதர் குளம்” விநாயக தீர்த்தத்திற்கு “கடிக்குளம்” என்ற பெயரும் உண்டு.
    • இத்தலத்து இறைவன் பெயர், “கற்பக நாதர்.

    கற்பகநாதர் குளம் விநாயகர் தீர்த்தம்

    "கற்பகநாதர் குளம்" விநாயக தீர்த்தத்திற்கு "கடிக்குளம்" என்ற பெயரும் உண்டு.

    எனவே, இத்தலத்திற்கு "கடிக்குளம்" என்று பெயர். தீர்த்தத்தின் பெயரே ஊரின் பெயராக இருப்பது தனிச்சிறப்பாகும்.

    கடிக்குளம் என்பதே தற்போது மக்களால், "கற்பகநாதர் குளம்" என்றும், "கற்பகனார் கோவில்" என்றும் அழைக்கப்படுகிறது.

    இத்தலத்து இறைவன் பெயர், "கற்பக நாதர், கற்பகேஸ்வரர்" என்றும், அம்பாள் பெயர், "சௌந்தரநாயகி, பால சௌந்தரி என்றும் அழைக்கப்படுகிறது.

    மூலவர், சிறிய மூர்த்தியாக, எட்டுப் படைகளுடன், எழிலாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

    அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது. விநாயகர் இறைவனை வழிபட்டு, மாங்கனி பெற்ற தலம், இது.

    இத்தலத்து சிறப்புமிக்க தீர்த்தமாகிய "விநாயக தீர்த்தம்" (கடிக்குளம்) இந்த ஆலயத்தின் வலது பக்கத்தில் உள்ளது.

    ஒருவர் தமது முன்னோரின் எலும்புகளை, ஒரு கலத்தினுள் வைத்து தீர்த்த யாத்திரையாக இந்த தீர்த்தத்தை வந்து அடைந்த போது, அந்தக் கலயத்தில் இருந்த எலும்புத் துண்டுகள் தாமரைப் பூவாக மலர்ந்ததாம்.

    அப்போது தான் தெரிந்தது. இந்தத் தலமும், தீர்த்தமும் முக்தி தரும் இடம் என்று அன்று முதல் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி செய்வது வழக்கமாக உள்ளது.

    திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டிய காடு செல்லும் பேருந்தில் சென்றால், இத்தலத்தை அடையலாம்.

    • நள தீர்த்தத்தின் கரையில் விநாயகர் ஆலயம் உள்ளது.
    • வெள்ளிக்கிழமை இரவு இந்த ஆலயத்தில் தங்கி, சனிக்கிழமை காலையில் இதில் நீராட வேண்டும்.

    திருநள்ளாறு நளதீர்த்தம்

    திருநள்ளாறு ஆலயத்திற்கு சனி பகவான் தோஷ பரிகாரத்திற்காகச் செல்பவர்கள் முதலில்,

    பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், அன்ன தீர்த்தம் அட்ட திக்கு பாலகர் தீர்த்தங்கள், அகஸ்தியர் தீர்த்தம், அம்ஸ தீர்த்தம் முதலியவற்றில் நீராடிவிட்டு நள தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

    நள தீர்த்தம் கோவிலுக்கு சற்று தள்ளி உள்ளது.

    நள தீர்த்தத்தின் கரையில் விநாயகர் ஆலயம் உள்ளது.

    நளதீர்த்ததில் நீராடிவிட்டு, இந்த விநாயகர் ஆலயத்திற்குச் சென்று அங்கு நளனுக்காக சிவபெருமான் ஏற்படுத்திய கங்கைத் தீர்த்தமாகிய, "கங்காகூபம்" (நளகூபம்) உள்ளது.

    இதில் நீராடி, புதுத்துணி உடுத்தி, விநாயகரை வழிபட்டு, பின், இறைவன், அம்பாள் சனிபகவான் ஆகியோரை வழிபட்டு, ஆலயத்தில் உள்ள காகத்திற்கு சோறு அளித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    வெள்ளிக்கிழமை இரவு இந்த ஆலயத்தில் தங்கி, சனிக்கிழமை காலையில் இந்த தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

    • இங்கு தான் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
    • மகாலட்சுமி தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்கள் பெருகும்

    ஒரே தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள்!

    ராமபிரான் புண்ணிய தீர்த்ததில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட தலம் ராமேஸ்வரம்.

    இங்கு தான் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

    22 புண்ணிய தீர்த்தங்களும், நீராடினால் கிடைக்கும் பலன்களும் வருமாறு:

    மகாலட்சுமி தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்கள் பெருகும்

    சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் - சடங்குகளைச் செய்யாதவர்களும், சந்ததி இல்லாதவர்களும் நற்கதி பெறலாம்.

    சங்கு தீர்த்தம் - நன்றி மறந்த பாவம் நீங்கும்.

    சக்கர தீர்த்தம் - தீராதி நோயும் தீரும்.

    சேது மாதவ தீர்த்தம் - செல்வம் கொழிக்கும்.

    நள தீர்த்தம் - இறையருளைப் பெற்ற சொர்க்கத்தை அடையலாம்.

    நீல தீர்த்தம் - யாகப் பலன் கிட்டும்.

    கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம்.

    கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    கந்தமான தீர்த்த - தரித்திரம் நீங்கும்

    பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்; பில்லி சூனியப் பிரச்சனைகள் விலகும்.

    சந்திர தீர்த்தம் - கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    சூரிய தீர்த்தம் - ஞானம் பெறலாம்.

    சாத்யாம்ருத தீர்த்தம் - தேவதைகளில் கோபத்தில் இருந்து விடுபடலாம்.

    சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.

    சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்

    கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்கள் - பிறவிப்பயனை அடையலாம்.

    இறுதியாக,

    கோடி தீர்த்தம் - ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது.

    சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது.

    இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்குச் செல்ல வேண்டும்.

    • இங்கு காவிரி தாய் தனது மடியில் கிருஷ்ணனை வைத்தபடி காட்சி தருகிறாள்.
    • ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    தனி ஆலயத்தில் காவிரி தாய்

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் திருச்சேறை என்ற ஊர் உள்ளது.

    இங்கு சாரப்புட் கரணி என்ற குளத்தின் தென்மேற்கு கரையில் காவிரி தாய்க்கு தனிக்கோவில் உள்ளது.

    இங்கு காவிரி தாய் தனது மடியில் கிருஷ்ணனை வைத்தபடி காட்சி தருகிறாள்.

    ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    கும்பகோணம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் மங்களாம்பிகை கோவில் உள்ளது.

    இங்கு உள் பிரகாரத்தில் காவிரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.

    ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    திருமணம் ஆன புதுமண தம்பதிகள் தாலிச்சரடை வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வர்.

    வெற்றிலை, பாக்கு, பூ மாலை ஆகியவற்றை தண்ணீரில் விடுவார்கள்.

    ×