search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் காரிய கமிட்டி"

    • இந்தியா கூட்டணியுடன் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
    • பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் வகையில், நாடு முழுக்க 28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

    கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் உச்ச பட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். மறுசீரமைக்கப்பட்ட காரிய கமிட்டியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மொத்தம் 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, பா.ஜ.க.-வை வீழ்த்துவதற்கு இந்தியா கூட்டணியுடன் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

     

    அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் வகையில், நாடு முழுக்க 28 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. இந்த கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் அக்டோபர் 2-ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் நடைபெற இருந்தது.

    எனினும், இந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் இன்று அறிவித்து இருக்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், பொதுக்கூட்டம் எங்கு, எப்போது நடைபெறும் என்பது பற்றிய இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா தெரிவித்து இருக்கிறார்.

    • உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.
    • காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 35-ஆக உயர்த்த முடிவு.

    காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டியின் குழு புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் காரிய கமிட்டியில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    மேலும், அதிரஞ்சன் சௌத்ரி, ஏ.கே.ஆண்டனி, ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட 39 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    முன்னதாக, பிப்ரவரியில் நடந்த ராய்ப்பூர் மாநாட்டில் காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.

    காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 35-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • காணொலி மூலம் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார்.
    • கட்சித் தலைவர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்த பரபரப்பான சூழலில் நாளை மாலை காங்கிரஸ் தேசிய காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார் என்ற விபரம் வெளியாகாத நிலையில், அங்கிருந்தபடி காணொலி மூலம் கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என கூறப்படுகிறது. சோனியாகாந்தியுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் சென்றுள்ள நிலையில் அவர்களும் நாளைய கூட்டத்தில் காணொலி மூலம் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மீது நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள் என தெரிகிறது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அந்த கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக உள்ள நிலையில், நாளை நடைபெறும் தேசிய காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    ×