search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ஆலோசனை"

    • திருநங்ககைள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்படவுள்ளது.
    • போட்டி தூரத்தை நிறவைு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தடை செய்யப்பபட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடக்கிறது. இப்போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தளபதி திடல் வளாகத்தில் நாளை மறுநாள் மாலை 3.30 மணியளவில் நடைபெறும் மாரத்தான் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இப்போட்டிகள் பள்ளி பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ- மாணவிகள் ஆண்கள் பெண்கள் என 4 பிரிவாக 5 கிலோ மீட்டர் தூரமும் திருநங்ககைள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் 2ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் 3ம் பரிசாக ரூ.1,000 மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். போட்டி தூரத்தை நிறவைு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் பொதுப்பிரிவினர்கள் திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டியும் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுமதும பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போட்டியில கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயரை எம்.ஜி.ஆர் உள்விளையாட்டரங்கில் பதிவு செய்திடலாம். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் நா.புகழேந்தி எம்.எல்.ஏ மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் மற்றும் வாலிபால் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
    • இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் பேசியதாவது:-

    1.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதனடிப்படையில் காவல் துறை சார்பில் பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நிலையிலான ஒரு குழுவினை அமைக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பொதுப்பணி துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை சீரமைக்க வேண்டும்.

    பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான செய்திகள் மற்றும் எச்சரிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் TNSMART - மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

    மழை, வெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு, கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இடி, மின்னல் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை "DAMIN" மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    மின்தடை, சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின் வயர்கள் தொடர்பான புகார்களுக்கு 94987 94987 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    • போதைப் பொருள் தடுப்பு குழுவினர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    போதைப் பொருள் தடுப்பு குழுவினர்க ளுடனான ஆலோசனைக்கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    சமூகத்தை முற்றிலும் அழிப்பது மட்டுமல்லாமல் அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு.

    இன்றைய இளம் சமுதாயம் பரவலாக போதை பொருட்களுக்கு உட்பட்டு வருகின்றது. விளையாட்டாக ஆரம்பிக்கும் இப்பழக்கம், நாளடைவில் உயிரிழப்புக்களை ஏற்படுத்துகின்றன. இளம் சமுதாயத்தினர் போதைவஸ்துக்களுடன் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    போதைப்பொருட்களை பயன்படுத்திவிட்டு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்திட வேண்டும். போதை பொருட்கள் தடுப்பு போலீசார் மருந்தகங்கள், மொத்த விற்பனையாளர் நிறுவனங்களை முறையாக கண்காணித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை முறையாக கண்காணித்து உரிய போதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் போதை பொருட்கள் பயன்படுத்து வதினால் ஏற்படும் தீமைகள் குறித்து போதிய விழிப்புணர்வினை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×