search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப் பொருள் தடுப்பு குழுவினர்களுடன் கலெக்டர் ஆலோசனை
    X

    போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் முரளிதரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அருகில் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்டோங்கரே உள்ளார்.

    போதைப் பொருள் தடுப்பு குழுவினர்களுடன் கலெக்டர் ஆலோசனை

    • போதைப் பொருள் தடுப்பு குழுவினர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    போதைப் பொருள் தடுப்பு குழுவினர்க ளுடனான ஆலோசனைக்கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    சமூகத்தை முற்றிலும் அழிப்பது மட்டுமல்லாமல் அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு.

    இன்றைய இளம் சமுதாயம் பரவலாக போதை பொருட்களுக்கு உட்பட்டு வருகின்றது. விளையாட்டாக ஆரம்பிக்கும் இப்பழக்கம், நாளடைவில் உயிரிழப்புக்களை ஏற்படுத்துகின்றன. இளம் சமுதாயத்தினர் போதைவஸ்துக்களுடன் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    போதைப்பொருட்களை பயன்படுத்திவிட்டு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்திட வேண்டும். போதை பொருட்கள் தடுப்பு போலீசார் மருந்தகங்கள், மொத்த விற்பனையாளர் நிறுவனங்களை முறையாக கண்காணித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை முறையாக கண்காணித்து உரிய போதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் போதை பொருட்கள் பயன்படுத்து வதினால் ஏற்படும் தீமைகள் குறித்து போதிய விழிப்புணர்வினை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×