search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரு நாள் கிரிக்கெட்"

    வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என நியூசிலாந்து அணி கைப்பற்றியதன் மூலம், நான்காவது முறையாக வங்காளதேசம் அணி வாஷ் அவுட் ஆகி உள்ளது. #NZvBAN
    டுனிடின்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி முதல் 2 ஆட்டத்தில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது.

    முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் 69 ரன்னும், நிக்கோலஸ் 64 ரன்னும், தற்காலிக கேப்டன் டாம் லாதம் 59 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வங்காளதேச அணி 61 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது. சபிர் ரஹ்மான் மட்டும் நிலைத்து ஆடி 102 (12பவுண்டரி, 2 சிக்சர்) ரன்கள் குவித்தார். ஆனால், அந்த அணி 47.2 ஓவரில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதன்மூலம் நியூசிலாந்து மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் வங்காளதேச அணி 3-0 என்ற கணக்கில் 4வது முறையாக வாஷ்அவுட் ஆகி உள்ளது. இதற்கு முன்பு 2007, 2010, 2016ம் ஆண்டுகளில் இதேபோன்ற படுதோல்வியை சந்தித்தது. #NZvBAN
    வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் சதம் விளாசினார். #NZvBAN
    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இதில் மேகமூட்டமான சீதோஷ்ண நிலைக்கு மத்தியில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 49.4 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    அதிகபட்சமாக முகமது மிதுன் 57 ரன்களும், சபிர் ரஹ்மான் 43 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டுகளும், டாட் ஆஸ்ட்லே, ஜேம்ஸ் நீ‌ஷம் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 36.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் சதம் நொறுக்கிய தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 118 ரன்கள் (88 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.

    இது அவரது 16-வது சதமாகும். கேப்டன் கேன் வில்லியம்சன் அரைசதம் (65 ரன்) அடித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. முதலாவது ஆட்டத்திலும் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 20-ந்தேதி டுனெடினில் நடக்கிறது.
    ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். #YuzvendraChahal
    துபாய்:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

    இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 சதம் உள்பட 453 ரன்கள் குவித்து சாதனை படைத்த விராட் கோலி கூடுதலாக 15 புள்ளிகள் பெற்று தனது தரவரிசை புள்ளி எண்ணிக்கையை 899 ஆக உயர்த்தியுள்ளார். இதே தொடரில் 2 சதம் உள்பட 389 ரன்கள் சேர்த்த, இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 29 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 871 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார். இது அவரது அதிகபட்ச புள்ளி எண்ணிக்கை ஆகும். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 3-வது இடமும் (807 புள்ளி), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 4-வது இடமும் (803 புள்ளி), பாகிஸ்தானின் பாபர் அசாம் 5-வது இடமும் (798 புள்ளி) வகிக்கிறார்கள்.

    வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காத மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவான் 4 இடங்கள் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதே சமயம் அம்பத்தி ராயுடு 72-வது இடத்தில் இருந்து 48-வது இடத்துக்கு வந்துள்ளார். விக்கெட் கீப்பர் டோனி 21-வது இடத்தில் இருக்கிறார்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கணிசமான ரன்கள் திரட்டிய வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்கள் ஷாய் ஹோப், ஹெட்மயர் ஏற்றம் கண்டுள்ளனர். இந்த தொடரில் 250 ரன்கள் எடுத்த ஷாய் ஹோப் 22 இடங்கள் எகிறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனின் சிறந்த தரவரிசை இது தான். சதம் உள்பட 259 ரன்கள் சேர்த்த ஹெட்மயர் 31 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 841 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். 2-வது இடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கானும் (788 புள்ளி), 3-வது இடத்தில் இந்தியாவின் குல்தீப் யாதவும் (723 புள்ளி) உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 ஆட்டத்தில் ஆடி 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 3 இடங்கள் உயர்ந்து 8-வது இடத்தை (683 புள்ளி) பிடித்துள்ளார். சாஹல் டாப்-10 இடத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும். ரவீந்திர ஜடேஜா 16 இடங்கள் அதிகரித்து 25-வது இடத்தை பெற்றுள்ளார்.

    ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இங்கிலாந்தும் (126 புள்ளி), 2-வது இடத்தில் இந்தியாவும் (121 புள்ளி) தொடருகின்றன. 3 முதல் 6-வது இடங்களில் முறையே நியூசிலாந்து (112 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (110 புள்ளி), பாகிஸ்தான் (101 புள்ளி), ஆஸ்திரேலியா (100 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன. #YuzvendraChahal
    ×