search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் மாயம்"

    • தருமபுரி அருகே தபால் ஊழியர் மாயம் ஆனார்.
    • மனைவி போலிசீல் புகார்

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜாராம்(46) இவர் இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா(36) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜாராம் நம்மாண்டஅள்ளியில் உள்ள தபால் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    ராஜாராமுக்கும் அவரது மனைவி அம்பிகாவிற்கும் விவசாயம் செய்ய வாங்கிய ரூ. 10 லட்சம் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 17ந்தேதி ராஜாராம் வீட்டில் இருந்து தபால் அலுவலகம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு போன் செய்து பார்த்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    அவரை பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை தெரிகிறது. இது குறித்து ராஜாராம் மனைவி அம்பிகா அளித்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓட்டலில் ஊழியராக வேலை செய்துவந்தார். இவர் திடீரென மாயமானார். இவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    • சிவகுமார் மனைவி கீதா பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். .

    க்டலூர்:

    பண்ருட்டி அப்பாளுபத்தர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (57) இவர், பண்ருட்டி- சென்னை சாலையில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை செய்துவந்தார். இவர் திடீரென மாயமானார்.

    இவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து சிவகுமார் மனைவி கீதா பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஓட்டல் ஊழியர் சிவகுமாரை தேடி வருகிறார்.

    • முத்துசாமி சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார்.
    • போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் சின்ன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 47). இவரது உறவினர் முத்துசாமி. இவர் சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று முத்துசாமி, சந்திரசேகருக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறினார். சந்திரசேகர் உடனே அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது முத்துசாமி அவரிடம் தனது பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் விஜயகுமார் என்பவரிடம் ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கியில் செலுத்த கொடுத்தேன், எனது காரை எடுத்து சென்றார்.

    வெகு நேரமாகியும் அவர் திரும்பவில்லை. செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் சென்று விசாரித்து வாருங்கள் என்றார். அதன் பின்னர் சந்திரசேகர் அவர் கூறிய வங்கிக்கு சென்று விசாரித்தார். இதில் விஜயகுமார் வங்கிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

    உடனே சந்திரசேகர் விஜயகுமார் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் வீட்டை காலி செய்து சென்று விட்டதாக கூறியுள்ளனர். அப்போது தான் விஜயகுமார் காருடன் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். பெட்ரோல் பங்க் ஊழியர் காருடன் ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவர் புகார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்பியம்பட்டு ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி சத்தியவாணி (வயது 29) இவர் ஜோலார்பேட்டை அருகே பெரியகம்பியம்பட்டு மேல் முஸ்லிம் தெரு அரசு பள்ளி சத்துணவு மையத்தில் உதவியாளராகபணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 18-ந்தேதி காலை பள்ளிக்கு சென்றவர் பணி முடிந்து மாலை 3 மணியளவில் வீட்டுக்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் நண்பர்கள் வீடுகள் தேடியும் கிடைக்கவில்லை.

    இதனால் ராமலிங்கம் தன்னுடைய மனைவி காணவில்லை என புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சத்துணவு உதவியாளர் தேடி வருகின்றனர்.

    ×