search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியலை"

    • சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.
    • அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள குமரகிரி பகுதியில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வழக்கம்போல் பூஜைகளை முடித்து இரவு கோவிலை பூட்டி விட்டுச் சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து கோவில் நிர்வாகி பாபு கொடுத்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பரமத்திவேலூர் தாலுகா, சேளுர் சாணார்பாளையம், கள்ளாங்காடு பகுதியில் கருப்பண்ண சாமி கோவில் உள்ளது.
    • ஒரேநாளில் நடைபெற்ற இந்த உண்டியல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    பரமத்திவேலூர்;

    பரமத்திவேலூர் தாலுகா, சேளுர் சாணார்பாளையம், கள்ளாங்காடு பகுதியில் கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை வழக்கம் போல் பூஜைகள் செய்து விட்டு கோவில் பூசாரி ரங்கசாமி வீட்டிற்கு சென்று விட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது கோவிலில் உள்ள இரும்பாலான உண்டியலின் மேல் பகுதி உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து கோவில் பூசாரி ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடைக்கப்பட்ட உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. இதே போல் சேளுர் சாணார்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுமார் 47 அடி உயரமுள்ள முனியப்பன் சாமி கோயில் உண்டியலையும் மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

    ஆனால் அந்த உண்டியலை உடைக்க முடியாதததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கோவில் முன்பு இருந்த வேல் ஒன்றை உடைத்து விட்டு சென்றுள்ளனர். ஒரேநாளில் நடைபெற்ற இந்த உண்டியல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    சேலம், வேலு நகரில் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடினர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி வேலு நகரில் பஸ் ஸ்டாப் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடித்த பின்பு வழக்கம்போல பூஜாரி கோவிலை பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்து. மேலும் அதில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற அறிந்த கோயில் நிர்வாகிகள் சம்பவம் குறித்து அன்னதானபட்டி போலீசில் புகார் அப்படி சொன்னார்.அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

    மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்றனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை மெயின் கேட் அருகே செங்காட்டு முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கமாக நேற்று பூஜை நடைபெற்று இரவு அனைவரும் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை பூஜை செய்வதற்காக பொதுமக்கள் கோயிலுக்கு சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சேலம் இரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றது யார் என்பதைக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×