search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுத்திருவிழா"

    • விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர்.
    • பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் "உணவுத் திருவிழா" கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் குஜராத் என்று அந்தந்த மாநிலங்களின் சிறப்புமிக்க உணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்க த்தினையும் எடுத்துரைத்தனர். சமூக அறிவியல் துறையால் தானிய வகைகள் மூலம் அலங்கரிக்க ப்பட்ட 'உலக வரைபடம்" அனைவரையும் கவர்ந்தது. விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதா பானு,மேலாளர் ராமசாமி ஆகியோர் மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.

    • சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    • தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. ஒருங்கிணைக்கிறார்.

    தொடர்ந்து 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த இடங்கள் வருமாறு:-

    தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், கொளத்தூர், முரசொலி மாறன் மேம்பால பூங்கா, பெரம்பூர், ராபின்சன் பூங்கா, ராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், சிந்தாதிரிப்பேட்டை, டென்னிஸ் விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், டவர் பூங்கா, அண்ணாநகர், ஜெய் நகர் பூங்கா, கோயம்பேடு, ராமகிருஷ்ணா நகர் விளையாட்டு திடல், வளசரவாக்கம், சிவன் பூங்கா, கே.கே.நகர், கடற்கரை சாலை, திருவான்மியூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், சைதாப்பேட்டை, நடேசன் பூங்கா, தியாகராய நகர்.

    தினமும் கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அப்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக் கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற் பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

    நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில் உணவுத் திருவிழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழாக்கள் நடக்கும் இடங்களில் கிராமிய சூழலை உருவாக்கி, பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வண்ணம் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
    • மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளார் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் குத்துவிளக்கேற்ற, நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம் ஆகியோர் ரிப்பன் வெட்டி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், கம்பு அடை, கேழ்வரகு அடை, முளைகட்டிய பாசிப்பயிறு, நவதானிய இனிப்பு உருண்டைகள், கொண்டைக்கடலை, சோள தோசை மேலும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என 100-க்கும் மேற்பட்ட அறுசுவை உணவு வகைகள் மற்றும் 54 வகையான பழ வகைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

    இந்த உணவுத் திருவிழாவில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையாளராக கலந்து கொண்டு தங்களுக்கான பிடித்த உணவை சுவைத்து உண்டு கண்டுகளித்தனர்.

    சிறந்த முறையில் உணவு சமைத்து வந்த மாணவ, மாணவிகளுக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் வழங்கினார்கள்.

    விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஷ்வரி, குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீணா மற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    • தொண்டியில் அரசு பள்ளியில் உணவுத்திருவிழா நடந்தது.
    • நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர்.

    தொண்டி

    தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உணவுத் திருவிழா தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தெற்கு தெரு ஜமாத்தார்கள், நண்பர்கள் அறக்கட்டளை, தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரிய பயிற்றுனர் தனலெட்சுமி, சுரேஷ்குமார் உட்பட பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் துரித உணவுகளின் தீமைகள், கலப்படமற்ற பாரம்பரிய இயற்கை உணவின் நன்மைகளை பற்றிய விழிப்புணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும் வகையில் பெற்றோர்கள் தானியங்களில் உணவுகளை தயார் செய்து கொண்டு வந்தனர். சிறந்த இயற்கை உணவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
    • உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேசனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் "உணவுத்திருவிழா'' மிக சிறப்பாககொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவைதுவக்கி வைத்தார். விழாவில் மாணவ, மாணவிகள் சிறுதானியவகைகள், கீரைவகைகள், பழச்சாறுகள், கூழ் வகைகள், கலவை சாதம், இனிப்புவகைகள் மற்றும் முளை கட்டிய பயிறு வகைகள் என்று பல்வேறு விதமானஉணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர்.

    மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்கத்தினையும் எடுத்துரைத்தனர். ஒவ்வொரு மாநிலத்தில் விளையும் விளைபொருட்கள் என்னென்ன என்பதை இந்திய வரைப்படம் மூலம் விளக்கினர். விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். விழாவின் நிறைவாக தாளாளர் கார்த்திகேயன், முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு மற்றும் மேலாளர் ராமசாமி மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.

    • உணவு திருவிழாவில் புதிதாக பீப் பிரியாணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • பீப் பிரியாணி கடைகளுக்கு இன்று மாலை நேரில் செல்ல அமைச்சர் மா.சுப்பிரணியன் முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் 3 நாள் உணவு திருவிழா நேற்று தொடங்கி உள்ளது. இதில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், 65 விதமான தோசை வகைகள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது. மீன் உணவுகள், நெல்லை இருட்டுக்கடை அல்வா போன்றவையும் உணவு திருவிழாவில் கிடைக்கின்றன.

    இந்த உணவு திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். உணவு திருவிழாவுக்கு சென்று பல்வேறு வகையான உணவு வகைகளையும் மக்கள் ருசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் உணவு திருவிழாவில் புதிதாக பீப் பிரியாணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, உணவு திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்காக 3 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்று கூறினார்.

    இந்த பீப் பிரியாணி கடைகளுக்கு இன்று மாலை நேரில் செல்ல அமைச்சர் மா.சுப்பிரணியன் முடிவு செய்துள்ளார். இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் உணவு திருவிழாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கடை வைத்திருப்பவர்கள் தெரிவித்தனர்.

    ஞாயிற்றுக்கிழமையான நாளை அதிகளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நாளை உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது.
    • பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நாளை உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது.

    3 நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

    உணவு வீணாகுவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இங்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளது. 14-ந்தேதி காலை 7 மணியளவில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்படுகிறது.

    இந்த உணவு திருவிழாவில் திரைக்கலைஞர்கள், பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நுகர்வோர் நலன் கருதி, ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
    • உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பெற்றுக்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அளவிலான பொது வினியோக திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெய்பீம் வரவேற்றார். அமைச்சர்கள் சக்ரபாணி, சாமிநாதன், கயல்விழி, பொதுவினியோகதிட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    நுகர்வோர் நலன் கருதி, ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில், ஆற்று வெள்ளம், மழை வெள்ளத்தால், ரேஷன் கடை பொருட்கள் பெற முடியாத பகுதிகள் இருந்தால், கிராமத்துக்கே சென்று பொருட்கள் வழங்க வேண்டும். மலைகிராம மக்களுக்கு, ரேஷன் பொருட்களை தேடிச்சென்று வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த 94 ஆயிரம் பேர், வெளிமாநிலங்களில் இருந்தபடி, ரேஷன் பொருள் பெற்று வருகின்றனர். தகுதியற்ற நபர்களுக்கு, சிறப்பு சலுகை கார்டுகள் வழங்க கூடாது.தகுதியான நபர்களுக்கு சலுகை கிடைக்காமலும் இருக்கக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

    உணவு பாதுகாப்புத்துறை சார்பில், ஆகஸ்டு 7ந் தேதி, காங்கயத்தில் உணவுத்திருவிழா நடக்க உள்ளது. திருவிழாவுக்கான, போஸ்டர்களை, அமைச்சர்கள் வெளியிட, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பெற்றுக்கொண்டார். 

    • சரிவிகித உணவு உண்டு ஆரோக்கியமாக நோயற்ற வாழ்வு வாழ வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.
    • கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து உணவு திருவிழாவை நடத்தி வருகிறது.

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் 75- வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து உணவு திருவிழாவை நடத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் இன்று நடந்த பேரணியில் மாணவ- மாணவிகள் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாராதமாதா வேடமணிந்து பங்கேற்றனர். குறைவான சர்க்கரை, குறைவான உப்பு, குறைவான கொழுப்பு என்ற உணவு மந்திரத்தை கடைபிடித்து சரியான உணவு, சரிவிகித உணவு உண்டு ஆரோக்கியமாக நோயற்ற வாழ்வு வாழ வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.

    மாணவ -மாணவிகள், நடை பயிற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இதில் பங்கேற்றனர். பேரணி யின் தொடக்க விழா கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

    நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் கொடிஅசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தஞ்சை சிவம், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.செந்தில் குமார், வட்டார உணவு பாதுகாப்பு அலுவ லர் குமார பாண்டியன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா உள்பட பலர்கலந்து கொண்டனர். கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த பெருநடை பேரணி காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, சிலுவைநகர், கோவளம் ரோடு வழியாக கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடியும் சீரோ பாயிண்டில் நிறை வடைந்தது.

    ×