search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதள சேவை"

    • 5 நாட்களுக்கு இணையதளங்களும் முடக்கப்பட்டு உள்ளன.
    • சில இடங்களில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதற்கு பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையடுத்து கடந்த மே மாதம் 3-ந் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அதன் பிறகும் சில இடங்களில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திங்கங்பாய் கிராமத்தில் நேற்று முன் தினம் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து, சூரசந்த்பூர் மாவட்ட கலெக்டர் தருண் குமார், சூரசந்த்பூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் இங்கு 5 நாட்களுக்கு இணையதளங்களும் முடக்கப்பட்டு உள்ளன.

    • கலவரம் மூண்டதை தொடர்ந்து மே 3-ந்தேதி முதலே மாநிலத்தில் செல்போன் இணையதளம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
    • மணிப்பூர் ரைபிள் படையினரின் முகாமில் கடந்த 1-ந்தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

    இம்பால்:

    மணிப்பூரில் மெய்தி, குகி இன பிரிவினருக்கு இடையே கடந்த மே 3-ந்தேதி கலவரம் வெடித்தது. 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை.

    கலவரம் மூண்டதை தொடர்ந்து மே 3-ந்தேதி முதலே மாநிலத்தில் செல்போன் இணையதளம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இடையில் செப்டம்பர் மாதத்தில் சில நாட்கள் மட்டும் இந்த சேவை மீண்டும் வழங்கப்பட்டு இருந்தது. பின்னர் அடுத்தடுத்து இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மணிப்பூர் ரைபிள் படையினரின் முகாமில் கடந்த 1-ந்தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது.

    இதைத்தொடர்ந்து மாநிலத்தில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே சமூக வலைத்தளங்கள் வழியாக வதந்தி பரவுவதை தடுக்க செல்போன் இணையதள சேவை துண்டிப்பை நாளை (புதன்கிழமை) வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை கமிஷனர் ரஞ்சித் சிங் பிறப்பித்து உள்ளார்.

    • மணிப்பூரில் உள்ள இரு சமூகத்தினரும் தங்கள் பகுதி மாவட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • பெயர் மாற்றுபவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

    மணிப்பூரில் கடந்த மே மாதம், மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. அதில் 180 பேர் பலியானார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூர் மாநில ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கேம்சந்த் யும்னம் வீடு நோக்கி கையெறி குண்டு வீசிய சம்பவம் நேற்று நடந்தது. அவரது வீடு, இம்பாலில் யும்னம் லெய்கை பகுதியில் உள்ளது. வீடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், திடீரென வீட்டை நோக்கி கையெறி குண்டை வீசினர்.

    நல்லவேளையாக, பிரதான வாயிலுக்கு சற்று முன்பே குண்டு கீழே விழுந்து வெடித்து விட்டது. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தினேஷ் சந்திரதாஸ் மற்றும் ஒரு பெண் காயமடைந்தனர். வெடிகுண்டு சிதறல்கள் பட்டதால், அவர்களுக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது.

    சம்பவ இடத்தை முதல்-மந்திரி பிரேன்சிங் பார்வையிட்டார். குண்டு வீச்சுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கிடையே, மணிப்பூரில் உள்ள இரு சமூகத்தினரும் தங்கள் பகுதி மாவட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தலைமை செயலாளர் வினீத் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாநில அரசின் அனுமதியின்றி, மாவட்டங்கள், நிறுவனங்கள், இடங்கள், துணை கோட்டங்கள் ஆகியவற்றின் பெயரை சிலர் மாற்றுவதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி மாற்றுவது, தற்போதைய சூழ்நிலையில் இரு சமூகங்களுக்கிடையே பிளவை உருவாக்கும்.

    சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து விடும். எனவே, இதுபோன்று பெயர் மாற்றுபவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதை தடுக்க இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.
    • கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3- தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, மணிப்பூரில் ஜூலை 5-ம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மணிப்பூரில் ஜூலை 8-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நீடித்து வரும் கலவரத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

    • மணிப்பூர் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
    • பெண்களின் முற்றுகை போராட்டத்தால் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க முடியாமல் ஏமாற்றத்துடன் அந்த பகுதியைவிட்டு சென்றனர்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி இன பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை கடந்த 45 தினங்களுக்கும் மேலாக நீடிக்கிறது.

    20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தும் அங்கு அமைதி நிலவவில்லை. கலவரம் நீடித்து வருகிறது. 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மணிப்பூ ரில் மந்திரியின் வீடு மற்றும் பா.ஜனதா அலுவலகத்துக்கு மர்ம கும்பல் தீ வைத்தது.

    மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பொது சுகாதார பொறியியல் துறை, நுகர்வோர் மற்றும் உணவு விவகாரத் துறை மந்திரியாக இருப்பவர் சுசிந்த்ரோ. மைதேயி சமூகத்தை சேர்ந்த இவரது வீடு இம்பால் கிழக்கு பகுதியில் உள்ளது.

    இவருக்கு சொந்தமான குடோனை நேற்று இரவு மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்தியது. அதோடு அவரது வீட்டுக்குள் ஒரு கும்பல் நுழைந்து கட்டிடத்துக்கும் தீ வைத்தது. பாதுகாப்பு படையினர் அங்கு வந்த மர்மகும்பலை கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தது. லேசாக எரிந்த தீயை அணைத்தனர். ஏற்கனவே பெண் மந்திரி வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டிருந்தது.

    இதே போல அங்குள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு படையினர் உடனே வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்கு கொண்டு வந்தனர்.

    மணிப்பூர் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், கொள்ளை போன வழக்கு தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. குழு மணிப்பூர் போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு செல்ல முயன்றது.

    ஆனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டு நின்று அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க முடியாமல் ஏமாற்றத்துடன் அந்த பகுதியைவிட்டு சென்றனர்.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். மாலை 3 மணியளவில் இந்த கூட்டம் நடக்கிறது.

    • பா.ஜனதா தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
    • மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை. 45 தினங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது.

    மணிப்பூர் கலவரத்தில் 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தாலும் அமைதி நிலவவில்லை.

    பா.ஜனதா தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அலுவலகம் சூறையாடப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் 9 பேரை சுட்டுக் கொன்றது. 2 நாட்களுக்கு முன்பு துப்பாக்கி தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் காயம் அடைந்தார்.

    இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு 2 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    மணிப்பூர் கிழக்கில் உள்ள தாங்ஜிங்கில் நேற்று இரவு 11.45 மணியளவில் ஒரு கும்பல் 15 முதல் 20 ரவுண்டுகள் வரை துப்பாக்கி யால் சுட்டது.

    செல்ஜன் மற்றும் சிங்டா பகுதியில் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை துப்பாக்கிசூடு நிகழ்ந்தது. அசாம் ரைபிள் வீரர்கள் இந்த இரண்டு இடங்களுக்கும் சென்று காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • காண்டோ சபல் கிராமத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.

    கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. கலவரத்துக்கு இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 300- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பா.ஜனதா மந்திரிகளின் அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்டன. புதிய வன்முறை காரணமாக ராணுவ வீரர்கள் கடந்த 2 தினங்களாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று இரவு காண்டோ சபல் கிராமத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் லீமோகாங் ராணுவ மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.கிராம மக்களை குறி வைத்துதான் அந்த கும்பல் தாக்க வந்தது. ராணூவ வீரர்களை பார்த்ததும் அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது.
    • மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மலை பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது. பத்தாயிரம் ராணுவ வீரர்களைக் குவித்தும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து, பொது அமைதி கெட்டு கடந்த 22 நாட்களாக சின்னஞ் சிறிய மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது..

    ரஷ்யா-உக்ரைன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டாண்மை செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சி எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது. அசாம் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் சென்று அமைதியை உருவாக்க முயற்சிக்காதது ஏன்?

    உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்த மணிப்பூர், சில ஆண்டுகளுக்கு முன்பு அமைதி வழிக்குத் திரும்பி, வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தற்போது மீண்டும் அமைதி சீர்குலைக்கப்பட்டு, இணையதளம் முடக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே இம்மாதம் தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது.
    • மீண்டும் அங்கு வன்முறை வெடித்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே இம்மாதம் தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியது. வாகனங்கள் ,வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் பலர் இறந்தனர். கலவரத்தை அடக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் மீண்டும் அங்கு வன்முறை வெடித்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். ராணுவ தளபதி மனோஜ்பாண்டே இன்று மணிப்பூர் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வன்முறை சம்பவங்கள் மேலும் பரவாமல் தடுக்க மேலும் 5 நாட்களுக்கு மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ×