search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூரில் மீண்டும் 2 இடங்களில் துப்பாக்கிசூடு
    X

    மணிப்பூரில் மீண்டும் 2 இடங்களில் துப்பாக்கிசூடு

    • பா.ஜனதா தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
    • மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை. 45 தினங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது.

    மணிப்பூர் கலவரத்தில் 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தாலும் அமைதி நிலவவில்லை.

    பா.ஜனதா தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அலுவலகம் சூறையாடப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் 9 பேரை சுட்டுக் கொன்றது. 2 நாட்களுக்கு முன்பு துப்பாக்கி தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் காயம் அடைந்தார்.

    இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு 2 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    மணிப்பூர் கிழக்கில் உள்ள தாங்ஜிங்கில் நேற்று இரவு 11.45 மணியளவில் ஒரு கும்பல் 15 முதல் 20 ரவுண்டுகள் வரை துப்பாக்கி யால் சுட்டது.

    செல்ஜன் மற்றும் சிங்டா பகுதியில் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை துப்பாக்கிசூடு நிகழ்ந்தது. அசாம் ரைபிள் வீரர்கள் இந்த இரண்டு இடங்களுக்கும் சென்று காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×