search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிட்டர்"

    • மனைவிக்கு இ-மெயில் மூலம் மெசெஜ் அனுப்பி விட்டு பரிதாபம்
    • மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    பத்துகாணி நிரப்பு ரோடு லட்சுமி இல்லத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் ஹரிஹரன் (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஆடிட்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நளினி (45). இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    ஹரிஹரன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள் ளார். இந்நிலையில் அவரது வீட்டை அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்துள் ளார். இதில் இவர்க ளுக்குகிடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை காலி செய்யும்படி ஹரிஹரன் பலமுறை கூறியுள்ளார்.

    ஆனால் அவர் வீட்டை காலி செய்யவில்லை, இதனால் அவர் பத்துகாணி போலீஸ் நிலையத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் போலீசார், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து போன ஹரிஹரன் என்ன செய்வது என்று தெரியாமல், மன உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்நிலையில் அவரது மனைவி நளினிக்கு, தான் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பிரபல லாட்ஜில் இருப்பதாகவும், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்யப்போவதாகவும் இ-மெயில் மூலம் மெசெஜ் அனுப்பி உள்ளார். இதனால் பயந்து போன நளினி தனது உறவினர்களை, லாட்ஜிக்கு அனுப்பி பார்க்கும்படி கூறியுள்ளார். அப்போது ஹரி ஹரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து அவரது மனைவி நளினி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆடிட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் பெண் ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் நகைகள், ரூ2 லட்சம் திருட்டு சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • பெண் வேலையாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மதிச்சியம் காந்தி நகர் ஆசாத் தெருவை சேர்ந்தவர் கீதா. இவர் செராமிக்ஸ் கடையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போனது.

    திருட்டு

    நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இந்த திருட்டு குறித்து ஆடிட்டர் கீதா மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண் வேலையாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருட்டு போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் என்று கூறப்படுகிறது. திருட்டு சம்பவம் தொடர்பாக ஆடிட்டர் கீதா வீட்டில் பணிபுரியும் பெண் ஊழியர் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை புதூர் மண்மலைச் சாமி தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் செக்யூரிட்டி சர்வீஸ் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வருகிறார். இவருடைய அலுவலகம் திலகர்திடல் பகுதியில் உள்ளது. இவர் வெளியே சென்றிருந்தபோது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர், அங்கு வைக்கப் பட்டிருந்த

    ரூ.36ஆயிரம் பணம் மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர், சி.பி.யூ., கீபோர்டு, மவுஸ் முதலியவைகளையும் திருடிச் சென்றுவிட்டார்.

    இந்த திருட்டு குறித்து திலகர்திடல் போலீசில் ஆனந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்மநபர் யார்? என்று துப்பு துலக்குகின்றனர்.

    • நிறுவனத்தில் முதலீட்டு தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
    • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பவுன் குமார் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    திருச்சி:

    சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (வயது 35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார்.

    இதனை அறிந்துகொண்டு அவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர்பாபு, திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

    அப்போது வெட்ரா கேப்பிட்டல்ஸ் என்ற வணிக நிறுவனத்தை மைக் கேல் என்பவர் நடத்தி வருவதாகவும், அவரது நிறுவனத்தில் முதலீட்டு தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை முழுமையாக நம்பிய ஆடிட்டர் பவுன் குமார் பணத்தை முதலீடு செய்யவும் தயாரானார்.

    அதன்படி சென்னையில் இருந்து திருச்சி வந்த அவர், நெம்பர் 1 டோல் கேட்டில் அலுவலகம் அமைத்துள்ள சங்கர்பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோரிடம் கடந்த 10.7.2019-ல் முதல் கட்டமாக ரூ.8.50 லட்சம் பணத்தை வழங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்த தவணைகளில் ரூ.10 லட்சம், ரூ.32 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டனர். காலம் கடந்தும் அவர்கள் முதலீட்டு பணத்துக்கான வட்டி எதையும் வழங்கவில்லை.

    முதலில் கனிவாக பேசிய 2 பேரும் பின்னர் பவுன்குமாரை மிரட்ட தொடங்கினர். அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பவுன் குமார் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சங்கர்பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    ×