search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zlatan Ibrahimovic"

    அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் சோஸரின் சிறந்த புதுமுக வீரராக இப்ராஹிமோவிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரூனே 2-வது இடத்தை பிடித்துள்ளார். #MLS #LAGalaxy
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக், லா லிகா, லீக் 1, செரி ஏ போன்று அமெரிக்காவில் மேஜர் லீக் சோஸர் கால்பந்து லீக் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் லீக் தொடரில் விளையாடும் பிரபலமான வீரர்கள், 30 வயதிற்குப் பிறகு ஆட்டத்திறன் குறையும்போது மேஜர் லீக் சோஸரில் பங்கேற்பது இயல்பு.

    அப்படித்தான் இந்த ஆண்டு இப்ராஹிமோவிச், ரூனே ஆகியோர் மேஜர் லீக்கில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இதில் இப்ராஹிமோவிச் 22 கோல்கள் அடித்துள்ளார். 20 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். இதனால் சிறந்த புதுமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



    எல்ஏ கேலக்சி அணிக்காக விளையாடி வரும் இப்ராஹிமோவிச்சிற்கு 36.36 சதவீத வாக்குகளும், டிசி யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ரூனே 32.25 சதவீத வாக்குகளம் பெற்றனர்.
    அமெரிக்காவில் நடைபெற்று வரும் மெகா லீக் சோஸர் லீக்கில் ஸ்வீடன் வீரர் இப்ராஹிமோவிச் ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். #MLS
    அமெரிக்காவில் மெகா லீக் சோஸர் என்ற பெயரில் கால்பந்து லீக் தொடர் நடைபெற்று வருகிறது. ஐரோப்பா நாடுகளில் நடத்தப்படும் கால்பந்து லீக்கில் நீண்ட காலம் விளையாடிய பின்னர், சுமார் 30 வயதிற்குப் பின் முன்னணி வீரர்கள் மெகா லீக் சோஸரில் விளையாடுவது வழக்கம்.

    அந்த வகையில் ஸ்வீடன் நாட்டின் தலைசிறந்த வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிச் எல்ஏ கேலக்சி அணிக்காக விளையாடி வருகிறார். இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் எல்ஏ கேலக்சி ஓர்லாண்டோ சிட்டியை எதிர்கொண்டது.



    முதல் 54 நிமிடத்தில் ஓர்லாண்டோ சிட்டி 3-2 என முன்னிலைப் பெற்றிருந்தது. எல்ஏ கேலக்சி அணிக்காக இப்ராஹிமோவிச் 47-வது நிமிடத்தில் கோல் அடித்திருந்தார். அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் எல்ஏ கேலக்சி 4-3 என வெற்றி பெற்றது.



    எல்ஏ கேலக்சி அணிக்காக இப்ராஹிமோவிச் 17 போட்டிகளில் விளையாடி 15 கோல்கள் அடித்துள்ளார்.
    மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக சம்பளம் வாங்காமல் இலவசமாக விளையாட விரும்பியதாக ஸ்லாடன் இப்ராஹிமோவிச் தெரிவித்துள்ளார். #MUFC
    ஸ்வீடன் நாட்டின் கால்பந்து பந்து வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிச். 36 வயதாகும் இவருக்கு ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான ஸ்வீடன் அணியில் இடம் கிடைக்கவில்லை. தலைசிறந்த ஸ்ட்ரைக்கரான இவர் 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி 122 போட்டிகளில் 113 கோல் அடித்துள்ளார்.

    2016-ம் ஆண்டு மான்செஸ்டர் அணிக்கு மாறினார். 2018 வரை மான்செஸ்டர் அணிக்காக 33 போட்டிகளில் விளையாடி 17 கோல் அடித்தார். இவரை அடிக்கடி காயம் துன்புறுத்தியதால் பெரும்பாலான நேரங்களில் ஓய்வில்தான் இருந்தார். இதனால் மான்செஸ்டர் அணி அவரை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. தற்போது அமெரிக்கா சென்று லா கிளாக்சி அணிக்காக விளையாடி வருகிறார்.

    மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட விரும்பியது குறித்து இப்ராஹிமோவிச் நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் மான்செஸ்டர் அணிக்காக விளையாட விரும்பினேன். அதற்காக சம்பளம் கூட வாங்க விரும்பவில்லை. அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.



    2016-ம் ஆண்டு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததால் ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் மான்செஸ்டர் அணிக்கு மாறினார். 35 வயதான இவரை 2016-17 சீசனுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2017-18 சீசனிலும் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    சுவீடன் அணிக்காக 2001-ம் ஆண்டு முதல் 2016 வரை 116 போட்டிகளில் விளையாடி 62 கோல் அடித்துள்ளார்.
    இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்றதால் சுவீடனின் முன்னாள் வீரர் இப்ராஹிமோவிச்சை பந்தயத்தில் வீழ்த்தியுள்ளார் டேவிட் பெக்காம். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டெவிட் பெக்காமும், சுவீடனின் நட்சத்திர வீரரான இப்ராஹிமோவிச்சும் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டனர்.

    முதலில் இப்ராஹிமோவிச் ‘‘சுவீடன் வெற்றி பெற்றால் கட்டுமான நிறுவனான Ikea-வில் நான் என்ன கேட்டாலும் வாங்கித் தர வேண்டும். அதேவேளையில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் உலகின் எந்த மூளையிலும் நீங்கள் டின்னர் சாப்பிட விரும்பும் இடத்தில் நான் வாங்கி தருகிறேன்’’ என்று டேவிட் பெக்காமிற்கு டுவிட் செய்திருந்தார்.



    இதற்கு டேவிட் பெக்காம் ‘‘சுவீடன் வெற்றி பெற்றால் நான் உங்களை Ikea அழைத்துச் சென்று லாஸ் ஏஞ்சல்ஸில், எந்த இடத்திலும் புது வீடு வாங்கித் தருகிறேன். ஆனால், இங்கிலாந்து வெற்றி பெற்றால் நீங்கள் வெம்ப்லே மைதானத்திற்கு வந்து இங்கிலாந்து போட்டியை, இங்கிலாந்து ஜெர்சி அணிந்து பார்க்க வேண்டும்’’ என்று பதில் டுவிட் செய்திருந்தார்.

    தற்போது இங்கிலாந்த வெற்றி பெற்றதால் டேவிட் பெக்காம், வெய்ன் ரூனே ஆகியோர் இப்ராஹிமோவிச்சை கிண்டல் (troll) செய்து வருகின்றனர்.
    ×