search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wayne Rooney"

    இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரரான வெயின் ரூனே ரத்தம் சொட்ட சொட்ட அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் விளையாடினார். #Rooney
    அமெரிக்காவில் நடைபெறும் கால்பந்து லீக் தொடருக்கு மேஜர் லீக் சோஸர் (Major League Soccer-MLS) என்று பெயர். இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த வெயின் ரூனே மான்செஸ்டர் அணியில் இருந்து எவர்டென் அணிக்கு மாறினார். தற்போது எவர்டென் அணியில் இருந்து அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் சோஸருக்கு மாறியுள்ளார். இங்கு டிசி யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில டிசி யுனைடெட் கோலோராடோ அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் வெயின் ரூனே முதல் கோலை பதிவு செய்தார். 82-வது நமிடத்தில் கோலோராடோ பதில் கோல் அடிக்க ஸ்கோர் சமநிலை பெற்றது. 90-வது நிமிடத்தில் ஓன் கோல் மூலம் டிசி யுனைடெட்டிற்கு கோல் கிடைக்க 2-1 என வெற்றிபெற்றது.



    இந்த போட்டியின்போது 90-வது நிமிடத்திற்குப் பிறகு இன்ஜூரி நேரம் கொடுக்கப்பட்டது. அப்போது பந்தை தடுக்க முயன்றபோது ரூனேயின் மூக்கில் காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் சொட்டியது. சிறிது நேரம் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய ரூனே பின்னர் வேளியேறினார். காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்ட பிறகு, மீண்டும் விளையாடி களம் இறங்கினார்கள்.



    32-வது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் ரூனே தனது 4-வது போட்டியில் டிசி யுனைடெட் அணிக்காக முதல் கோலை பதிவு செய்துள்ளார்.
    இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்றதால் சுவீடனின் முன்னாள் வீரர் இப்ராஹிமோவிச்சை பந்தயத்தில் வீழ்த்தியுள்ளார் டேவிட் பெக்காம். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டெவிட் பெக்காமும், சுவீடனின் நட்சத்திர வீரரான இப்ராஹிமோவிச்சும் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டனர்.

    முதலில் இப்ராஹிமோவிச் ‘‘சுவீடன் வெற்றி பெற்றால் கட்டுமான நிறுவனான Ikea-வில் நான் என்ன கேட்டாலும் வாங்கித் தர வேண்டும். அதேவேளையில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் உலகின் எந்த மூளையிலும் நீங்கள் டின்னர் சாப்பிட விரும்பும் இடத்தில் நான் வாங்கி தருகிறேன்’’ என்று டேவிட் பெக்காமிற்கு டுவிட் செய்திருந்தார்.



    இதற்கு டேவிட் பெக்காம் ‘‘சுவீடன் வெற்றி பெற்றால் நான் உங்களை Ikea அழைத்துச் சென்று லாஸ் ஏஞ்சல்ஸில், எந்த இடத்திலும் புது வீடு வாங்கித் தருகிறேன். ஆனால், இங்கிலாந்து வெற்றி பெற்றால் நீங்கள் வெம்ப்லே மைதானத்திற்கு வந்து இங்கிலாந்து போட்டியை, இங்கிலாந்து ஜெர்சி அணிந்து பார்க்க வேண்டும்’’ என்று பதில் டுவிட் செய்திருந்தார்.

    தற்போது இங்கிலாந்த வெற்றி பெற்றதால் டேவிட் பெக்காம், வெய்ன் ரூனே ஆகியோர் இப்ராஹிமோவிச்சை கிண்டல் (troll) செய்து வருகின்றனர்.
    இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரரான வெயின் ரூனே அமெரிக்காவின் மேஜர் லீக் சோசரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். #WayneRooney
    இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் வெயின் ரூனே. இங்கிலாந்து அணிக்காகவும், பிரிமீயர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசமாக்கியுள்ளார்.

    இவர் 2002 - 2004-ம் ஆண்டு வரை எவர்டன் அணிக்காக விளையாடினார். அதன்பின் 2017 வரை சுமார் 13 வருடங்கள் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். கடந்த சீசனில் தாய் கிளப்பான எவர்டனுக்கு திரும்பினார்.



    இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்படும் மேஜர் லீக் சோசருக்கு செல்கிறார். இந்த தொடரில் இடம்பிடித்துள்ள டிசி யுனைடெட் அணியுடன் ரூனே ஒப்பந்தம் செய்துள்ளார்.

    32 வயதாகும் ரூனே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 393 போட்டிகளில் விளையாடி 183 கோல்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 119 போட்டிகளில் விளையாடி 53 கோல் அடித்துள்ளார்.
    ×