search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "david beckham"

    இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்றதால் சுவீடனின் முன்னாள் வீரர் இப்ராஹிமோவிச்சை பந்தயத்தில் வீழ்த்தியுள்ளார் டேவிட் பெக்காம். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டெவிட் பெக்காமும், சுவீடனின் நட்சத்திர வீரரான இப்ராஹிமோவிச்சும் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டனர்.

    முதலில் இப்ராஹிமோவிச் ‘‘சுவீடன் வெற்றி பெற்றால் கட்டுமான நிறுவனான Ikea-வில் நான் என்ன கேட்டாலும் வாங்கித் தர வேண்டும். அதேவேளையில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் உலகின் எந்த மூளையிலும் நீங்கள் டின்னர் சாப்பிட விரும்பும் இடத்தில் நான் வாங்கி தருகிறேன்’’ என்று டேவிட் பெக்காமிற்கு டுவிட் செய்திருந்தார்.



    இதற்கு டேவிட் பெக்காம் ‘‘சுவீடன் வெற்றி பெற்றால் நான் உங்களை Ikea அழைத்துச் சென்று லாஸ் ஏஞ்சல்ஸில், எந்த இடத்திலும் புது வீடு வாங்கித் தருகிறேன். ஆனால், இங்கிலாந்து வெற்றி பெற்றால் நீங்கள் வெம்ப்லே மைதானத்திற்கு வந்து இங்கிலாந்து போட்டியை, இங்கிலாந்து ஜெர்சி அணிந்து பார்க்க வேண்டும்’’ என்று பதில் டுவிட் செய்திருந்தார்.

    தற்போது இங்கிலாந்த வெற்றி பெற்றதால் டேவிட் பெக்காம், வெய்ன் ரூனே ஆகியோர் இப்ராஹிமோவிச்சை கிண்டல் (troll) செய்து வருகின்றனர்.
    உலக கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை சந்திக்கும் என்று தான் நம்புவதாக இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் கூறியுள்ளார்.
    பீஜிங்:

    விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சீனா சென்றிருந்த இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமிடம், 2018-ம்ஆண்டு உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் எந்த அணிகள் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை சந்திக்கும் என்று நம்புகிறேன்’ என்று பதில் அளித்தார். மேலும் அவர், ‘இங்கிலாந்து அணி இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.



    தொடக்க லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணிக்கு நிறைய அனுபவம் கிடையாது. பெரிய அணிகளை சந்திக்க வேண்டி இருப்பதால் இங்கிலாந்துக்கு இந்த உலக கோப்பை பயணம் இனி தான் கடினமாக இருக்கும்’ என்றார். 
    உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள் மோதும் என பெக்காம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த அணிதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும், இந்ததெந்த அணிகள்தான் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று முன்னாள் நட்சத்திர வீரர்கள் கணித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் பெக்காம், இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேவிட் பெக்காம் கூறுகையில் ‘‘அர்ஜென்டினா இங்கிலாந்தை எதிர்த்து இறுதிப் போட்டியில் விளையாடும் என்று நம்புகிறேன். என்னுடைய தேர்வு எதுவென்றால், அது இங்கிலாந்து அணியாகத்தான் இருக்கும். நான் இங்கிலாந்தை சார்ந்தவன் என்பதாலும், அந்த உணர்ச்சி எனக்கு இருப்பதாலும் இதைச் சொல்கிறேன்.



    உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்து மிகவும் இளம் வீரர்களை கொண்ட அணியாக உள்ளது. அவர்கள் அதிக அளவில் அனுபவம் பெறவில்லை என்பதால், உலகக்கோப்பையில் அவர்களது பயணம் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது’’ என்றார்.



    1966-ம் ஆண்டு மட்டுமே உலகக்கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து, பெக்காம் தலைமையில் 2006-ம் ஆண்டு காலிறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×