search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yogasana"

    • உலகம் முழுவதும் சர்வதேச 8-வது யோகாதினம் இன்று கொண்டாடப்பட்டது.
    • மதுரையில் மாணவ-மாணவிகள், போலீசார் யோகாசனம் செய்தனர்.

    மதுரை

    உலகம் முழுவதும் சர்வதேச 8-வது யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. நடப்பாண்டிற்கான சிறப்புப் பெயராக, "மனித நேயத்திற்கான யோகா" என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் இன்று யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்கள் இன்று காலை வெள்ளை உடையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்துக்கு வந்தனர். அவர்களுக்கு பயிற்சியாளர்கள் யோகாசனங்களை கற்று கொடுத்தனர்.

    தல்லாகுளம் ரிசர்வ் லைன், ஆயுதப்படை மைதானத்தில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். அவர்கள் யோகாசனத்தில் பல்வேறு பயிற்சிகளை செய்து காட்டினர். மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அதிகாலை முதல் யோகாசன பயிற்சி களைகட்டியது. இதில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பயிற்சியாளர் முன்னிலையில் விதவிதமான யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.

    மதுரை மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகாசனப் பயிற்சி நடந்தது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச யோகா தினம், 2 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட வில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று சர்வதேச யோகாதினம் மீண்டும் அனுசரிக்கப்படுவது, பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஆர்.கலைமகள் கலந்து கொண்டு யோகா செய்வதன் அவசியத்தையும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
    • அலுவலகத்தில் பணிபுரிகின்ற ஊழியர்கள் அனைவருக்கும் எளிய முறையில் செய்யும் விதமாக பல்வேறு யோகாசனங்களை பயிற்றுவித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் 8-வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தஞ்சை தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் தலைமை தாங்கி நடத்தினார். சிறப்பு விருந்தினராக யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஆர்.கலைமகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி அளித்தார். மேலும் யோகா செய்வதன் அவசியத்தையும், அதன் பயன்களை பற்றியும் எடுத்துரைத்தார்.

    அலுவலகத்தில் பல்வேறு வயது வரம்பில் பணிபுரிகின்ற அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் எளிய முறையில் செய்யும் விதமாக பல்வேறு யோகா சனங்களை பயிற்றுவித்தார். முன்னதாக, தஞ்சாவூர் தலைமை அஞ்சலக துணை அஞ்சலக தலைவர் குழந்தைராஜ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக சித்ரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ×