search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens Kabaddi"

    • திருப்பூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
    • மாவட்ட அளவிலான கபடி போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில், மாவட்ட பெண்கள் கபடி சாம்பியன்ஷிப்போட்டி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் இன்று நடந்தது.

    விழாவில் திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் நாச்சிமுத்து, தலைவர் முருகேசன், பொருளாளர் ஆறுச்சாமி, துணை சேர்மன் முருகானந்தம், துணை தலைவர்கள் ராம்தாஸ், செந்தூர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விவேகானந்தம் மைதானத்தை திறந்து வைத்தார். செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் வரவேற்று பேசினார். தலைமை புரவலர் சக்தி பிலிம்ஸ் சுப்ரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கபடி கழக கொடியை துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஏற்றி வைத்தார்.

    பெண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில் மண்டல தலைவர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    ஆசிய விளையாட்டு பெண்கள் கபடியில் ஈரான் அணி தங்கம் வெல்ல இந்தியாவை சேர்ந்த பயிற்சியாளரே முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார். #AsianGames2018
    ஜகார்தா:

    ஆசிய விளையாட்டு கபடியில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு ஈரான் முடிவு கட்டியது.

    இதுவரை நடந்த அனைத்து கபடி போட்டியிலும் தங்கம் கிடைத்தது. அதாவது ஆண்கள் பிரிவில் 7 தங்கமும், பெண்கள் பிரிவில் 2 தங்கமும் தொடர்ச்சியாக கிடைத்தது.

    இந்த ஆசிய விளையாட்டில் போட்டியில் கபடி மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆண்கள் அணி நேற்று முன்தினம் அரை இறுதியில் ஈரானிடம் தோற்றது. இதனால் வெண்கல பதக்கம் கிடைத்தது.

    இதேபோல பெண்கள் கபடி அணியும் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஈரானிடம் 24-27 என்ற கணக்கில் தோற்று ஹாட்ரிக் தங்கப்பதக்கத்தை தவறவிட்டது. வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.

    பெண்கள் கபடியில் ஈரான் அணி தங்கம் வெல்ல இந்தியாவை சேர்ந்த பயிற்சியாளரே முக்கிய காரணமாக திகழ்ந்தார். மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்த ஷைல்ஜா ஜெயின் கடந்த 18 மாதங்களாக ஈரான் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    ஈரான் அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்த ஷைல்ஜா கூறியதாவது:-

    ஈரான் அணிக்கு நான் பொறுப்பை ஏற்றபோது இது எனது பணி. சிறந்த பயிற்சியாளர் என என்னை நிரூபிப்பேன் என்று கூறினேன். அதற்கான முடிவுகளை தற்போது நாங்கள் கொடுத்துள்ளோம்.

    பணியில் சேர்ந்த போது மொழி பிரச்சினை காரணமாக வீராங்கனைகளுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொள்வது கடினமாக இருந்தது. இதனால் பார்சி மொழி கற்றேன்.

    இறுதி ஆட்டத்தில் முதல் 5 நிமிடங்களுக்கு பிறகு எங்களது டிபன்ஸ் மிகவும் சிறப்பாக இருந்தது. இதுவே வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது.

    மேலும் எங்கள் அணியின் 3 ரைடர்கள் அற்புதமாக செயல்பட்டனர். ஆட்டம் தொடங்கும் முன்பு நான் வீராங்கனைகளிடம் கூறியது ஒன்றே ஒன்று தான். அது தங்கப்பதக்கம் இல்லாமல் என்னை இந்தியா அனுப்பி வைத்து விடாதீர்கள் என்பது தான்.

    அப்போது சில வீராங்கனைகள் என்னிடம் வந்து நீங்கள் எதை விரும்புனீர்களோ அதை நிச்சயம் உங்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என்றார்கள்.



    இறுதிபோட்டி எனக்கும், ஈரான் அணிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த ஈரான் கபடி சங்கத்துக்கு என்றும் நன்றியுடைவராக நான் இருப்பேன்.

    இந்தியா தோல்வி அடைந்தது எனக்கு வருத்தம் தான். மற்ற இந்தியர்களை போன்றே நானும் எனது நாட்டை நேசிக்கிறேன். ஆனால் கபடியையும் நான் நேசிக்கிறேன்.

    ஈரான் அணியை பற்றி மட்டுமே நான் சிந்திக்க முடியும். ஈரான் வீராங்கனைகளுக்கு தந்திரங்கள் மற்றும் யூக்திகள் குறித்து மட்டுமே கற்றுக்கொடுத்தேன். உடற்தகுதி தொடர்பாக நான் அவர்களுக்கு எந்தவித பயிற்சிகளையும் அளிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே உயர்மட்ட அளவிலான உடற்தகுதியுடனே இருந்தார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணி, இறுதிப்போட்டியில் ஈரானிடம் தோல்வி அடைந்ததால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. #AsianGames2018 #IranianWomensKabaddi
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அரையிறுதியில் சீன தைபே அணியை 27-14 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈரானை எதிர்கொண்டது.

    மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 24-27 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.



    இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IranianWomensKabaddi
    இந்திய மகளிர் கபடி அணி 3-வது ஆட்டத்தில் 38-12 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கையை வீழ்த்தி ‘ஹாட்ரிக்‘ வெற்றியை ருசித்தது. #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்திய பெண்கள் கபடி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தாய்லாந்து, இலங்கை, இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானையும் (43-12), 2-வது ஆட்டத்தில் தாய்லாந்தையும் (33-23) வீழ்த்தி இருந்தது.

    இந்திய மகளிர் கபடி அணி 3-வது ஆட்டத்தில் இன்று காலை இலங்கையை எதிர்கொண்டது. இதில் இந்தியா 38-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்று ‘ஹாட்ரிக்‘ வெற்றியை ருசித்தது. பிற்பகலில் இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்தோனேசியாவுடன் மோதுகிறது.

    இந்திய ஆண்கள் கபடி அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தாய்லாந்துடன் இன்று மோதுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தையும், 2-வது ஆட்டத்தில் இலங்கையையும் வீழ்த்தியது. 3-வது போட்டியில் 23-24 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோற்றது.

    டேக் வாண்டோ போட்டியில் இந்திய வீரர் அக்‌ஷய் குமார் கால்இறுதிக்கு தகுதி பெற்றார். 80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் பங்கேற்ற அவர் இலங்கையை சேர்ந்த பொனாண்டோவை 13-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    துடுப்பு படகு போட்டியின் லைட்வெயிட் 4 பேர் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அணியில் போபால்சிங், ஜக்விர்சிங், தேஜஸ் ஷிண்டே, பிரணாய் இடம் பெற்று இருந்தனர்.

    இதேபோல பெண்கள் இரட்டையர் பிரிவில் ஹர்பரீத்கவூர்- சஞ்ஜூதா ஜோடியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பெண்கள் கைப்பந்து போட்டியில் இந்திய அணி 18-25, 22-25, 13-25 என்ற கணக்கில் வியட்னாமிடம் தோற்றது. இந்திய அணி சந்தித்த 2-வது தோல்வியாகும். ஏற்கனவே தென்கொரியாவிடம் தோற்று இருந்தது. #AsianGames2018
    ×