search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women march"

    சபரிமலை கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய கேரள அரசு மறுத்துவிட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #Sabarimala #SabrimalaVerdict #PinarayiVijayan #WomenProtest
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்புக்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில அரசு முறையீட்டு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த முதல்மந்திரி பினராயி விஜயன், கோவிலுக்கு பெண்கள் வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.



    இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கேரள மாநிலம் கொட்டையம் பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குறிப்பாக பெருந்திரளான பெண்கள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யுமாறு கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்து பேரணி நடத்தினர். #Sabarimala #SabrimalaVerdict #PinarayiVijayan #WomenProtest
    ×