search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "who married for love"

    • வீட்டில் உள்ள ஒரு அறையில் மைதிலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு கணேச புரம், சிங்கிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மைதிலி (25). மைதிலி கடந்த 2016-ம் ஆண்டு திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ப வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் கணவரிடம் கோபித்து க்கொண்டு மைதிலி தாய் வீட்டுக்கு வருவது வழக்கம். பின்னர் கணேசன் சமாதா னப்படுத்தி மனைவியை உடன் அழைத்துச்செல்வார்.

    இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாக கணவரை பிரிந்து மைதிலி தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    மைதிலிக்கு சின்ன வயதில் இருந்தே கோபப்பட்டால் தலையை சுவற்றில் முட்டி கொள்வது வழக்கம். இதனால் அவருக்கு தலைவலி இருந்து உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மைதிலிக்கு மீண்டும் தலைவலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் உறவினர் ஒருவ ருக்கு போன் செய்து மைதிலியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு அவரது தாய் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.

    பின்னர் அவரது உறவினர் மைதிலி வீட்டுக்கு வந்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் மைதிலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சசிகலா தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் சின்னமுத்தூரைச் சேர்ந்தவர் தங்கமணி (45). இவரது கணவர் ரத்தினசாமி (51). இவர்களது மகள் சசிகலா (26).

    இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம், கொடுமுடி, வெங்கமேட்டூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    சசிகலா காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது பெற்றோர் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அதன் பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து, சசிகலாவின் தாய் தங்கமணி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×