காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை

சசிகலா தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை
Published on

ஈரோடு:

திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் சின்னமுத்தூரைச் சேர்ந்தவர் தங்கமணி (45). இவரது கணவர் ரத்தினசாமி (51). இவர்களது மகள் சசிகலா (26).

இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம், கொடுமுடி, வெங்கமேட்டூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சசிகலா காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது பெற்றோர் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து, சசிகலாவின் தாய் தங்கமணி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com