search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waterway"

    • செட்டேரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு வரும் நீர் வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
    • இதன் காரணமாக சுமார் 60 ஆண்டுகள் தண்ணீர் வராமல் வறண்டு காணப்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி வேடப்பட்டியில் ஏரி அமைந்துள்ளது செட்டேரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு வரும் நீர் வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது இதன் காரணமாக சுமார் 60 ஆண்டுகள் தண்ணீர் வராமல் வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 60 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உள்ளது நீண்ட காலமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த இந்த பகுதியில் தற்போது ஏறி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர் தொடர்ந்து பட்டாசு வெடித்தும் ஆட்டு கிடா பலியிட்டும் வணங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த ஏரி நிரம்பியதன் காரணமாக அறுபது ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யாமல் இருந்த மக்கள் தற்போது நெல் நடவு தொடங்கியுள்ளனர். இதனால் இந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் தொடர்ந்து இதே போன்று வருடா வருடம் ஏரி நிரம்ப அதிகாரிகள் நீர் வழி பாதையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கோரம்பள்ளம் வடிகால் கோட்ட பொறியாளர் உருவாட்டி கருமேனிஆற்றின் வழித்தடங்களை ஆய்வு செய்தார்.
    • மழைக்காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    உடன்குடி:

    உடன்குடிமற்றும் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மழைக்காலத்திற்குள் கருமேனிஆற்றின் நீர்வழிப்பாதைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்து தரவேண்டும் என்றுதொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதன் காரணமாக கோரம்பள்ளம் வடிகால் கோட்ட பொறியாளர் உருவாட்டி கருமேனிஆற்றின் வழித்தடங்களை நேரில் வந்து களஆய்வு செய்தார்.

    கருமேனிஆற்றின் சுப்ப ராயர்புரம் டைவர்ஷனுக்கு கீழ் உள்ள 1958-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள சடையனேரி தடுப்பணையில் உள்ள மணல்வாரி ஷட்டர் சேதமடைந்து உள்ளதையும்,

    அதனை அடுத்துள்ள கல்லானேரி-புல்லானேரி தடுப்பணைக்கு முன்பாக உள்ள 50 அடி நீளதடுப்புச் சுவர் சேதமடைந்து உள்ளதையும் கல்லானேரி-புல்லானேரி ஷட்டர்களில் ஒன்றுதிறக்க முடியாதபடி இறுகி போயிருப்பதையும், அதனை அடுத்த தடுப்பணை யை ஒட்டிய கால்வாய் கரைகள் இருபுறமும் சேதமடைந்து இருப்பதையும்,கல்லானேரிகுளத்திற்கு வரும் கால்வாய் வழித்தடத்தில் உள்ள தடுப்புச்சுவரை ஒட்டிய பகுதியில் உடைப்பு ஏற்பட்டுதண்ணீர் மீண்டும் ஆற்றிலேயே வீணாகசெல்லும் வகையில் சேதமடைந்து இருப்பதையும் நேரில் ஆய்வு செய்தார்.

    புல்லானேரி குளத்தின் மறுகால் தாண்டி தாங்கைக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் முன்பாக உள்ள வளைவில் கரை உடைந்துமீண்டும் கருமேனி ஆற்றினுள்ளேயே வீணாக தண்ணீர் செல்லும் வகையில் சேதமடைந்து இருப்பதையும் ஆய்வு செய்தார்.

    இவையணைத்தும் மழைக்காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாய நல சங்க தலைவர் சந்திரசேகரன், தாங்கைக்குளம் பாதுகாப்பு குழு தலைவர் ஜெயக்குமார், சிவலூர் ஜெயராஜ் உட்பட விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.

    ×