search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமேனிஆற்றின் நீர் வழித்தடத்தில் அதிகாரி நேரில் ஆய்வு
    X

    கருமேனி ஆற்றின் சட்டர்கள் திறக்க முடியாத அளவிற்கு சிக்கி இருக்கும் காட்சி.


    கருமேனிஆற்றின் நீர் வழித்தடத்தில் அதிகாரி நேரில் ஆய்வு

    • கோரம்பள்ளம் வடிகால் கோட்ட பொறியாளர் உருவாட்டி கருமேனிஆற்றின் வழித்தடங்களை ஆய்வு செய்தார்.
    • மழைக்காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    உடன்குடி:

    உடன்குடிமற்றும் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மழைக்காலத்திற்குள் கருமேனிஆற்றின் நீர்வழிப்பாதைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்து தரவேண்டும் என்றுதொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதன் காரணமாக கோரம்பள்ளம் வடிகால் கோட்ட பொறியாளர் உருவாட்டி கருமேனிஆற்றின் வழித்தடங்களை நேரில் வந்து களஆய்வு செய்தார்.

    கருமேனிஆற்றின் சுப்ப ராயர்புரம் டைவர்ஷனுக்கு கீழ் உள்ள 1958-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள சடையனேரி தடுப்பணையில் உள்ள மணல்வாரி ஷட்டர் சேதமடைந்து உள்ளதையும்,

    அதனை அடுத்துள்ள கல்லானேரி-புல்லானேரி தடுப்பணைக்கு முன்பாக உள்ள 50 அடி நீளதடுப்புச் சுவர் சேதமடைந்து உள்ளதையும் கல்லானேரி-புல்லானேரி ஷட்டர்களில் ஒன்றுதிறக்க முடியாதபடி இறுகி போயிருப்பதையும், அதனை அடுத்த தடுப்பணை யை ஒட்டிய கால்வாய் கரைகள் இருபுறமும் சேதமடைந்து இருப்பதையும்,கல்லானேரிகுளத்திற்கு வரும் கால்வாய் வழித்தடத்தில் உள்ள தடுப்புச்சுவரை ஒட்டிய பகுதியில் உடைப்பு ஏற்பட்டுதண்ணீர் மீண்டும் ஆற்றிலேயே வீணாகசெல்லும் வகையில் சேதமடைந்து இருப்பதையும் நேரில் ஆய்வு செய்தார்.

    புல்லானேரி குளத்தின் மறுகால் தாண்டி தாங்கைக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் முன்பாக உள்ள வளைவில் கரை உடைந்துமீண்டும் கருமேனி ஆற்றினுள்ளேயே வீணாக தண்ணீர் செல்லும் வகையில் சேதமடைந்து இருப்பதையும் ஆய்வு செய்தார்.

    இவையணைத்தும் மழைக்காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாய நல சங்க தலைவர் சந்திரசேகரன், தாங்கைக்குளம் பாதுகாப்பு குழு தலைவர் ஜெயக்குமார், சிவலூர் ஜெயராஜ் உட்பட விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×