என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Velankanni Festival"

    • மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.
    • திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    ஜனவரி 1-ந்தேதி மரியா இறைவனின் அன்னை விழா மற்றும் திருக்காட்சி திருவிழாவில் பங்கில் உள்ள சிறுவர்,சிறுமியர்களுக்கு புது நன்மை வழங்குதல்.

    பிப்ரவரி 2- ஆண்டவரை காணிக்கையாக ஒப்பு கொடுத்தல் விழா. முதல் திருப்பலி முடிந்ததும் மெழுகுவர்த்திகள் மந்திரிக்கப்படும்.

    பிப்ரவரி 11- லூர்து அன்னை விழா, மாலை மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திருப்பவனி.

    மார்ச் 25- கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழா.

    மே மாதம் - மாதாவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதம். காலை 5.45 மணிக்கு தமிழில் திருப்பலி, மாதா சொரூப ஆசீர்.

    காலை 7 மணிக்கு தமிழில் பாடல் திருப்பலி, மாலை 5.30 மணிக்கு மரியாவின் வணக்க மாதம். படித்தல் நவநாள் ஜெபம். அன்னையின் திருத்தேர் பவனி, திருப்பலி.

    மே 30- மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.

    மே 31- காலை 7 மணிக்கு பாடல் திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை செய்யப்பட்டு பகல் முழுவதும் ஆராதனை நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு மாதா குளத்தில் திருப்பலி, மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திவ்ய நற்கருணை பவனி, திரு உரை திவ்ய நற்கருணை ஆசீர்.

    ஜூன் மாதம்- இயேசு திரு இருதயத்துக்கு ஒப்பு கொடுக்கப்பட்ட மாதம். அன்றைய மாதம் தினமும் மாலை 5.45 மணிக்கு நவநாள் ஜெபம், ஜெப மாலை, இயேசுவின் திரு இருதய ஜெபம், திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி.

    ஜூன் 30- இயேசுவின் இருதய திருத்தேர் பவனி.

    ஜூலை 6- மாலை கார்மேல் அன்னை கொடியேற்றம்.

    ஜூலை 15- மாலை கார்மேல் அன்னை திருத்தேர் பவனி.

    ஜூலை 16- கார்மேல் அன்னை திருவிழா.

    ஆகஸ்டு 15- மரியாவின் விண்ணேற்பு பெருவிழா.

    ஆகஸ்டு 29- ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம், தொடர்ந்து 30-ந் தேதி முதல் செப்டம்பர் 6 -ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    செப்டம்பர் 7- பெரிய தேர்பவனி

    செப்டம்பர் 8- அன்னை மரியாள் பிறந்தநாள்.

    செப்டம்பர் 15- புனித வியாகுல மாதா திருவிழா.

    அக்டோபர் 7- புனித ஜெபமாலை அன்னை திருவிழா.

    நவம்பர் 21- புனித கன்னி மரியாவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல் விழா.

    டிசம்பர் 8- புனித கன்னி மரியாவின் அமர் மேற்பவ பெருவிழா.

    டிசம்பர் 24- நள்ளிரவு 11.45 தமிழில் பாடல் திருப்பலி.

    டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் பெருவிழா.

    டிசம்பர் 28- மாசிலா குழந்தைகள் விழா

    மேற்கண்ட திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    • இன்று மற்றும் நாளை மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் இன்று முகூர்த்த நாள், நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆகியவற்றை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்களும் என கூடுதலாக இன்று மற்றும் நாளை மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு பிரார்த்தனைகள், சிறப்பு ஆராதனைகள், திருப்பலி நடைபெறுகிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த விழாவில் பங்கேற்க வருவார்கள்.

    இதன் காரணமாக குறிப்பிட்ட நாட்களுக்கு சென்னை பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்பதற்கு வசதியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெசன்ட் நகருக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 8-ந்தேதி விழா நிறைவடைகிறது. இதையொட்டி, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை வேளாங்கண்ணி ஆலய த்துக்கு வருகிற 8-ந்தேதி வரை கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    பெரம்பூர், எண்ணூர், தாம்பரம், திருவொற்றியூர், கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து தினமும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த நாட்களில் முக்கிய பஸ் நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    வேளாங்கண்ணி திருவிழாவுக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரெயில்களின் எண், நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Velankanni #VelankanniFestival
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி திருவிழாவுக்கு இயக்கப்பட உள்ள ரெயிலின் எண் மற்றும் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    * வேளாங்கண்ணி-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயிலின் எண்: 06086 என்று இருந்தது. இது தற்போது 06072 என்று மாற்றப்பட்டுள்ளது.

    * வேளாங்கண்ணி-நாகர்கோவிலுக்கு செப்டம்பர் 3-ந்தேதி இயக்கப்பட உள்ள சிறப்பு ரெயில் (06094), வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 3-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  #Velankanni #VelankanniFestival

    ×