என் மலர்
நீங்கள் தேடியது "Varaghi amman"
- போலீஸ் லயன் தெருவில் இருக்கும் வாராகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது
- பக்தி மாலையோடு சேர்ந்து பண மாலையும் பக்தர்கள் அணிவித்தனர்
விளாத்திகுளம்:
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் லயன் தெருவில் இருக்கும் வாராகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால் அபிஷேகம், அன்னாபிஷேகம், மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து அன்னைக்கு பக்தர்களால் கொண்டுவரப்பட்ட தேன் கலந்த மாதுளம் பழம் மற்றும் அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தி மாலையோடு சேர்ந்து பண மாலையும் பக்தர்கள் அணிவித்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னையின் பிரசாதமும், அம்பாள் புகைப்படமும் வழங்கப்பட்டது.
- பஞ்சமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர்:
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். தேய்பிறை பஞ்சமி தினமான நேற்று பஞ்சமி தின சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை சிறப்பு அலங்காரம் ஆகியவை செய்யப் பட்டு மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உற்சவ தாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.






